Free Web Hit Counters
எல்லா நதிகளும் கடலை நோக்கி.... எல்லா மனித நேயப் பயணங்களும் காரல் மார்க்ஸை நோக்கி.....!
"புத்தம் புது பூமி! வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும்....." -கவிப்பேரரசு வைரமுத்து.....







"அரசியல் கோமாளிகளின் நையாண்டி நக்கல் காமெடி கலாட்டா!"

Wednesday, July 16, 2008

இந்தியா+அமெரிக்கா=அடிமை இந்தியா










இந்தியா+அமெரிக்கா=அடிமை இந்தியா



அந்நிய அமெரிக்க (பன்னாடை) பன்னாட்டு கம்பெனிகள்,நம் இந்தியாவிற்குள் நுழைந்து,இந்த மண்ணில் முளைத்த நமக்கு சொந்தமான சிறிய பெரிய குளிர்பானக் கம்பெனிகள்,குளியல்,சலவை சோப்பு கம்பெனிகள் என ஏராளமான கம்பெனிகளை விலைக்கு வாங்கியோ அல்லது விலைக்கு வாங்காமலோ ஒழித்துக் கட்டிக் கொண்டு...

பெப்சி,கோலா, இந்துஸ்தான் யுனிலீவர் மாதிரியான பெயர்களில், நமக்கு முன்னால் சப்தமில்லாமல் மினுமினுப்புக் காட்டி ஆட்டம்போட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த கம்பெனிகள் எல்லாம் அமெரிக்காவை தான் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகின்றன.

அதே போன்றே சாப்ட்வேர்,BPO எனப்படும் call centre கம்பெனிகள் பெரும்பாலும் அமெரிக்கா தரும் ஆர்டர்களை நம்பியே இங்கே கடை விரித்து இருக்கின்றன.

என்றைக்கு அமெரிக்கா மனசு மாறி கையை விரிக்கிறதோ, அந்த நிமிடமே அதைச் சார்ந்த கம்பெனியில் வேலையில் இருப்பவர்கள் எல்லாம் வேலையிழந்து, டைக் கட்டி நடுத்தெருவுக்கு வர வேண்டியிருக்கும் .



திரைப் படங்களில் கூட அமெரிக்க மாப்பிளைக்களுக்கு தான் அமோக மரியாதை,சாலைகளில் இருசக்கர வண்டிகளில் பறக்கும் இளசுகளின் தலைகளில் கட்டப்படும் கைக்குட்டைகளில் கூட அமெரிக்க கொடிதான்.நாட்டைக் கெடுத்த பெரும் புள்ளிகள் கூட தம் வாரிசுகளை படிக்க வைக்க அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்து தான், பூரித்துப் போய்கிறார்கள்.இப்படி அங்கு இங்கு என எங்கு திரும்பினாலும்
அமெரிக்க மோகம் தலை விரித்தாடுகிறது.

இது இப்படி இருக்க...

சமீபத்தில் கூட "இந்தியர்கள் நிறைய சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.அதனால்தான் உலக அளவில் உணவு பஞ்சம் வந்து விட்டது", என்று திமிர் பேச்சு பேசி மகிழ்ந்து, தன்னை யார் என்று அடையாளப் படுத்திக் கொண்டது,அமெரிக்கா அரசு.

இப்படிப்பட்ட வக்கிர புத்தியுள்ள அமெரிக்காவுடன் தான், கொஞ்சிக் குழைந்து இந்தியாவை அமெரிக்காவிற்கு அடகு வைத்திருக்கிறது, நம் மன்மோகன் "சிங்(க)" அரசு.


ஒரு பக்கம் உலக அளவில் சமாதனத்திற்காக அதிகமான நோபல் பரிசு வாங்கிய நாடு,இன்னொரு பக்கம் ஆபத்தான அணுகுண்டு அழிவு ஆயுதங்களை தயாரித்துக் குவிக்கும் நாடு என்ற பெருமை பெற்றது, ,அமெரிக்கா!இந்த இரட்டைக் கோணல்முகங்களை புரிந்து கொண்டாலே போதும் அமெரிக்கவைப் பற்றி புரிந்து கொள்ள...

நாட்டின் அதிவேகமான வளர்ச்சிக்கு தேவையான மின் சக்தியை,அணு மின் சக்திக் கொண்டுதான் சரி செய்ய முடியும். ஆகவே தான் அணுமின் உற்பத்திக் கருவிகளையும், அதற்கு தேவைப்படும் யுரேனியத்தையும் வாங்கிக் கொள்ளத் தான் இந்த அமெரிக்க ஒப்பந்தம் என்கிறது,நம் ம(ண்)ன் மோகன் சிங் அரசு.

உண்மை தான் என்ன?

அணு ஆயுதப் பரவலைத் தடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் ஐ.நா. வால் அமைக்கப்பட்ட குழுவில் அணுகுண்டு வியாபார நாடான அமெரிக்காவும் ஒன்று.இந்தியாவோடு சேர்ந்து மொத்தம் 36 நாடுகள்.

அந்த குழு தான் நம் நாட்டு அணு உலைகளை ஆய்வு செய்யும்.அந்த குழுவுக்கு திருப்தி இல்லை என்றால், எல்லா உதவிகளையும்,எந்த நேரத்திலும் நிறுத்திக் கொள்ள அதற்குத் தான் உரிமை இருக்கிறது.

நாம் மட்டும் என்ன அணு ஆராய்ச்சியில் குறைந்தவர்களா? என்றால் இல்லை என்றுதான் பதில் கிடைக்கிறது.இத்துறையில் உலகத் தர வரிசையில் இந்தியா 6ஆவது இடத்தில் இருக்கிறது.

அணு ஆராய்ச்சியில் 1952 ஆம் ஆண்டிலேயே இறங்கி விட்டது, நம் இந்தியா.நம் அப்துல்கலாம் காலத்தில் கூட அணுகுண்டை வெடிக்க வைத்து சோதித்து வெற்றி கண்டது.

ஏற்கனவே, ஒருமுறை 1963 இல் ஒப்பந்தம் செய்து கொண்ட அமெரிக்கா, 1983 இல் யுரேனியம் அனுப்புவதை நிறுத்தி ஒப்பந்தத்தை ரத்து செய்து டாட்டா காட்டி விட்டுப் போனது,அமெரிக்கா.மீண்டும் அந்த தாராப்பூர் அணுமின் நிலையம் ரஷ்ய உதவியுடன் மின் உற்பத்தியை தொடங்கியதெல்லாம்,பழைய கதை.

அந்த ஒப்பந்தத்தில் இன்னொரு பெரிய சிக்கலும் இருக்கிறது. ஹைட் என்னும் அமெரிக்க சட்டத்திற்கு இந்திய அரசு கட்டுப்படவேண்டுமாம்.அதாவது அமெரிக்காவில் அவர்கள் போடுகிற தாளத்துக்கு இங்கிருக்கிற இந்திய அரசு ஆட்டம் போட வேண்டுமாம். இந்த கிறுக்குக்கோமாளித் தனத்தை தான் செய்து விட்டு வந்திருக்கிறது,நம் மன்மோகன் சிங் அரசு.

அந்த சட்டம் சொல்வது தான் என்ன?

அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் எல்லா உலக சமாதனத் திட்டங்களுக்கும் ,இந்தியாவும் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமாம்.

அதாவது ஈராக் மீதோ அல்லது வேறு நட்பு நாட்டின் மீதோ அமெரிக்கா அத்து மீறி நுழைந்து அக்கிரமம் செய்யுமாம்.நாமும் அவர்கள் சொல்படி கேட்டு அமெரிக்காவுக்கு ஆதரவாக சண்டைக்குப் போக வேண்டுமாம் அல்லது ஆமாம் சாமி போட்டு விட்டு சும்மா இருக்க வேண்டுமாம்.

அப்படி அமெரிக்காவிற்கு ஆதரவாக இந்தியா நடந்து கொள்ளாத பட்சத்தில் அணு ஆலைக்கு செய்யும் எல்லா உதவிகளையும் , அமெரிக்கா எந்த நேரத்திலும் நிறுத்திக் கொள்ளுமாம்...

சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சியை கலைத்து விடவேண்டும் என்று அப்போதே சொன்னார்,அதன் தலைவராக இருந்த நம் காந்தி.அந்நியர்களை வீரத்தோடு தொரத்தி அடித்த அதே காங்கிரஸ் தான் இன்று வளர்ந்து நம் நாட்டையே அந்நிய அமெரிக்கனுக்கு அடகு வைத்து விட்டு நிற்கிறது!

இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துதான் கம்யூனிஸ்டுகள் கடந்த நான்கு ஆண்டுகளாக ஏன் இன்றும் கூட எதிர்த்து வருகிறார்கள்.


_ஆதிசிவம்,சென்னை.



Friday, June 20, 2008

தோழர் ஜீவா




1963 ஆம் ஆண்டு தமிழகத்தின்
காரல் மார்க்ஸ் என்று அழைக்கப்படும்
தோழர் ஜீவா அவர்கள்
"ஜனசக்தி" பத்திரிக்கை
அலுவலகத்தில் எழுத்துப்
பணியில் மும்முரமாக
ஈடுபட்டிருந்தார்.

அப்பொழுது இரு
இளம்பெண்கள் "ஜீவா"
இருக்கிறாரா என்று தயங்கி
தயங்கி கேட்டு ,
அனுமதிக்கபட்ட பிறகு
அவர்களிலிருவரும் ஜீவா
முன் சென்று அமர்ந்தனர்.

ஜீவா தன் இயல்பான
பரிவுக்குரலுடன், "
என்னம்மா வேண்டும்!" என்று
கேட்டார்.

"உங்களைத்தான் பார்க்க
வந்தோம் !" என்று ஒரு பெண்
கூறினாள்.

"நீ யாரம்மா ?"
என்று இருவரில்
பேசாமல் இருந்த பெண்ணைப்
பார்த்துக் கேட்டார்,ஜீவா.

அந்த பெண்ணும் பதில்
எதுவும் சொல்ல வில்லை.

ஏற்கனவே பேசிய அதே பெண்
திரும்பவும், "நாங்கள்
ஆசிரியப் பயிற்சி முடித்த
மாணவிகள்" என்றாள்.

மீண்டும் ஜீவா,பேசாமல்
தன்னையே பார்த்துக்
கொண்டிருந்த
இளம்பெண்ணைப் பார்த்து ,

மீண்டும்"நீ யாரம்மா?" என்று கேட்டார்.


அப்பெண்ணின் கண்கள்
கலங்கின.ஒரு துண்டுக்
காகிதத்தை அப்பெண்
ஜீவாவிடம் நீட்டினாள்,
அதில்

"எனது தாத்தாவின் பெயர்
குலசேகரதாஸ். எனது
அன்னையின் பெயர் கண்ணம்மா.
உங்கள் மகள் நான்" என்று
எழுதியிருந்தது.

அந்த வாக்கியங்களை
வாசித்து திகைத்துப் போன
ஜீவா அதே துண்டுக்
காகிதத்தின் இறுதியில்
"என் மகள்" என்று எழுதி அந்த
இளம் பெண்ணிடம்
நீட்டினார்,ஜீவா.

அந்த வார்த்தைகளை கண்
கொட்டாமல் பார்த்துக்
கொண்டே இருந்தாள்,அந்த
இளம் பெண்.

எழுதிய
துண்டுக்காகிதத்தை ஜீவா
திரும்பக் கேட்டார்.
அப்பெண் அதைக் கொடுக்க
வில்லை!

"என் மகள் என்று
சொல்வதற்குக்
கூச்சப்பட்டுத்தானே
தலையைச் சுற்றி மூக்கைத்
தொடுகிறாய் ",என்று ஜீவா
மனம் திறந்து கேட்டே
விட்டார்.

அப்பெண் சிரிப்பினால்
பதில் சொன்னாள் .

பிறந்தது முதல் பதினேழு
ஆண்டுக்காலம் தந்தை
ஜீவாவைக் கண்டிராமல்,
இப்பொழுது துண்டுக்
காகிதம் கொடுத்து
அறிமுகம் செய்து கொண்ட
அந்த பெண்ணின் பெயர்
குமுதா!

Friday, June 6, 2008

"பிளாஷ்டிக் மனிதர்கள்"- கவிதை





"பிளாஷ்டிக் பூமி" கவிதை
பிளாஷ்டிக் மனிதர்கள்


எழுபது சதம் தண்ணீரால் ஆனது பூமி
ஆனாலும்
விலைக்குத்தான் கிடைக்கிறது, தண்ணீர்!

தினம் தினம்
பசியால் செத்துக்கொண்டிருக்கும்
பூமியின் கைகளில்
50 பூமிகளை அழிக்க காத்திருக்கிறது
அணு ஆயுதங்கள்..

விலைவாசியைக் கட்டுப்படுத்த தெரியாத
வெடகம் கெட்ட- எங்களுக்கு
ராக்கெட் விடத் தெரியும்!


மனித இனத்தைத் தவிர
எல்லா உயிரினங்களும் அழிகிறதாம்
அதனால் என்ன
மனிதர்களே வித விதமான மிருங்களானபோது..

சாப்பிடும் உணவு தானியங்களிலிருந்து
பெட்ரோல் எடுக்கிறதாம், அமெரிக்கா
எல்லாம் ''தீர்ந்த'' பிறகு
''அவர்களின்'' பெட்ரோல் தொட்டியில் நிரப்ப
உங்களின்
இரத்தமும் கேட்டு வருவார்கள்

அதுவரை
நாம் மவுனமாக இருப்போம்...
ஆம்! நாம் மனிதர்கள்!
பிளாஷ்டிக் மனிதர்கள்!...



-ஆதிசிவம்,சென்னை

Friday, May 23, 2008

இடிக்கப்பட்டது சுவர் மட்டுமா...?

மலையடிவார அட்டூழியங்கள்......



கடந்த 15 ஆண்டுகளாக காட்டெருமை, கரடி, ஓநாய் போன்ற மிருகங்களிடமிருந்து தங்களது விவசாயத்தை பாதுகாத்து வந்த தாழையூத்து மலையடிவாரத்து தலித்துகள் இப்போது அவற்றை விட கொடிய மிருகங்களால் பெரும் சேதத்தை சந்தித்துள்ளனர். தீண்டாமைச் சுவர் இடிக்கப்படுவதை ஏற்க முடியாமல் ‘ஐயோ எங்களது பிறப்புரிமை போகிறதே’ என்று கதறிக்கொண்டு, ரேசன்கார்டுகளை தூக்கியெறிந்துவிட்டு மே 5ம் தேதி தாழையூத்து மலையடிவாரத்துக்குப் போனார்கள் Modarates (கிருஷ்ணசாமி உபயமளித்த திருநாமம்).

அங்கு 15 ஆண்டுகளுக்கு மேலாக காட்டுப்பகுதிகளை சீர்படுத்தி விவசாய நிலமாக்கி நெல், கம்பு, சோளம், ஆமணக்கு, மல்லிகை பயிர்களை வளர்த்து வைத்திருந்தனர் ஐந்து தலித்துகள். திடீரென பெருங்கூட்டம் தங்களது விளைநிலங்களை நோக்கி வருவது கண்டு அலறியடித்துக் கொண்டு உயிரைக் காப்பாற்ற ஊருக்குள் ஓடி வந்து விட்டனர். ஓடி வந்தவர்கள் ஊரில் இருந்த பதற்றமான நிலையறிந்து இதைச் சொன்னால் பிரச்சனை பெரிதாகிவிடுமோ என்று யாரிடமும் சொல்லாமல் பயந்து இருந்துவிட்டனர்.

இந்நிலையில் மே 7ம் தேதி தோழர் பிரகாஷ் காரத் உத்தப்புரம் மக்களிடம் உரையாற்றினார். அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன், மக்களிடம் பேசிக் கொண்டிருந்தபொழுது "இப்ப பயந்து மலைக்கு ஓடிட்டதா சொல்றாங்களே" என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஒருவர் "அவெங்க எங்க ஓடுனாங்கெ, அங்கேயும் போயி எங்க ஆளுகள அடிச்சு விரட்டீட்டு எங்க தோட்டத்துல இருந்துகிட்டு எங்களுக்கு எதிரா பேட்டி கொடுக்கிறாங்கே" என்று கூறியுள்ளார்.

உத்தப்புரம் போய் வந்த அன்று மாலை தோழர் தமிழ்ச்செல்வன் என்னிடம் இந்த விஷயத்தைக் கூறினார். "இதென்ன புதிய செய்தியாக இருக்கிறது" என்று உத்தப்புரம் தோழர்களிடம் விசாரிக்கச் சொன்னேன். 3 நாள் பயந்து இருந்தவர்கள் தாங்கள் விரட்டப்பட்ட செய்தியும், ஆடு, மாடு, கோழி என எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவந்த விபரத்தையும் உயிரற்ற குரலிலே சொன்னார்கள். உடனடியாக காவல் நிலையத்திலும், வட்டாட்சியரிடமும் புகார் செய்தோம். மொத்த அரசு நிர்வாகமும் மலையடிவாரவாசிகளிடம் கெஞ்சி கூத்தாடிக் கொண்டிருந்தபோது நிலத்தை மீட்டுத் தரும் முயற்சியையா செய்யப் போகிறார்கள். எதுவும் நடக்கவில்லை. இரண்டு நாள் கழித்து முதல்வருக்கு பாதிக்கப்பட்டவர்கள் தந்தி அனுப்பினார்கள். தந்தி அலுவலகத்தில் கொடுத்த ரசீது மட்டும்தான் மிச்சம்.

இந்நிலையில் மலையடிவாரவாசிகள் ஊர் திரும்பியவுடன் நிலத்துக்குச் சொந்தக்காரர்களான தலித்துகள் மொட்டையாண்டி, வாசி, பால்ராஜ், நாகராஜ், ராசு ஆகிய ஐவரும் தங்கள் நிலத்துக்குப் போயினர். அங்கே நடந்திருந்த அட்டூழியங்களைப் பார்த்து பதறியடித்துக் கொண்டு ஓடிவந்து விஷயத்தைச் சொன்னார்கள். நாங்கள் மே 14ம் தேதி மதியம் 3 மணிக்கு தாழையூத்து மலையடிவாரத்திற்கு நேரில் சென்றோம்.

தலித் மக்கள் கரடு முரடான மலையடிவாரத்தில் ஊத்துத் தண்ணீரை மட்டுமே நம்பி சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கி வைத்திருந்த வெள்ளாமை முழுவதும் சூறையாடப்பட்டிருந்தது. செழிப்பான விவசாய பூமியில் பயிர்களுக்கு அடியில் 500 பேருக்கு 7 நாட்களுக்கான சமையல் நடத்தப்பட்டுள்ளது. கொள்ளிக்கட்டையை பச்சைப்பயிர்களின் வேர்களுக்கு அடியில் வைத்த குரூர மணம் படைத்தவர்கள் அந்த இடங்களை உண்டு இல்லை என ஆக்கிவிட்டு திரும்பியுள்ளனர்.

மொட்டையாண்டி என்பவரது வீடு முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டது. வீட்டின் மேற்கூரையாக போடப்பட்டிருந்த தகரங்கள் எதுவும் இல்லை. 15 ஆடுகளும், 2 மாடுகளும் காணவில்லை. சுமார் நாலரை ஏக்கர் பட்டா நிலத்தில் நெல்லும், மல்லிகைப்பூவும் பயிர் செய்துள்ளார். ஆனால் இப்போது எஞ்சிய பயிர் எதுவும் இல்லை என்று சொல்லலாம்.

வாசியின் வீடும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த மண்பாணைகள் வெளியெங்கும் சிதறிக் கிடக்கின்றன. சுமார் அரை மூட்டை அரிசி மண்ணோடு மண்ணாக கொட்டிக் கிடந்தது. 6 வேப்பமரங்களும் இரண்டு புளியமரமும் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. கோழி, நாய்கள் எதுவும் இல்லை. சோளம், ஆமணக்கு, தட்டாம்பயிறு ஆகிய விவசாயங்கள் முழுவதும் மண்ணோடு மண்ணாக்கப்பட்டுள்ளது. பால்ராஜின் தோட்டம் பரிதாபமாக உள்ளது. நான்கு ஏக்கருக்கு நடப்பட்டிருந்த எலவம் பஞ்சு மரங்கள் பலவும் வெட்டிப் போடப்பட்டுள்ளது. தண்ணீர் பாய்ச்சுவதற்காக பதிக்கப்பட்டுள்ள பைப்புகள் முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டது. முருங்கை மரங்களும், கேந்திப்பூவும் பெரும்பகுதி அழிக்கப்பட்டுவிட்டது.

நாகராஜின் தோட்டம் மிகக் கடுமையான அழிவுக்கு உள்ளாகியுள்ளது. இங்குதான் தங்கியிருந்த 500 பேர்களுக்கும் தினமும் சமையல் நடந்துள்ளது. விவசாயத்திற்கு நடுவில் 6 நாட்களாக அண்டா அண்டாவாக அடுப்பெரித்தால் பயிரும், நிலமும் என்னவாகும்? அந்தக் கொடுமை அவரது தோட்டத்தில் நடந்துள்ளது. அந்தப் பகுதி முழுவதும் விவசாயம் நாசம் செய்யப்பட்டுள்ளது. அவரது வீடும், உள்ளே இருந்த பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டது. கேந்திப்பூச் செடிகளும், அகத்தியும், ஆமணக்கும் நாசமாக்கப்பட்டுவிட்டது.

ராசுவின் தோட்டத்திலும் இதே கதிதான். பெரும் பெரும் மரங்கள் வெட்டியெடுத்துச் செல்லப்பட்டுவிட்டது. சீனி அவரை, முருங்கை, செவ்வந்திப்பூ போன்ற பயிர்கள் முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டது. மரங்களை கட்டுக்கட்டாக வெட்டிக் கொண்டுபோயிருக்கிறார்கள். காட்டு மிருகங்களிடம் இருந்து தங்களைக் காக்க பெரிதும் பயன்பயன்பட்ட 12 நாய்களை அடித்தே கொன்றிருக்கிறார்கள். கோழி, ஆடுகளை எல்லாம் சாப்பிட்டுத் தீர்த்திருக்கிறார்கள். பயிர்களை எல்லாம் அழித்து நசுக்கியிருக்கிறார்கள். அனைத்தையும் இழந்த 5 தலித் குடும்பங்கள் அனாதையாக நிற்கிறது. பாதுகாப்பில்லை...பாதுகாப்பில்லை... என்று கத்திக்கொண்டே மலையேறிய Modarates அடுத்தவன் சொத்தை அழித்துத் தின்ற கொடுமை இது.

வெட்டப்பட்ட மரங்களை கட்டிப் பிடித்துக்கொண்டு “பச்சப்புள்ள மாதிரி வளத்தேனே...” என்று பிச்சையம்மாள் கதறியழுததும், “குலைக்க நாயில்லையே சாமீ...” என்று வெள்ளையம்மாள் தலையிலே அடித்துக் கொண்டு கதறியதும் நம் நெஞ்சை உலுக்கியது. அவர்களின் இந்தக் கதறல் தமிழகத்தின் ஆட்சியாளர்களின் காதுகளில் கேட்குமா?

சுவர் இடிப்பை ஏற்க மாட்டோம் என மலையடிவாரம் சென்றவர்களிடம் மாவட்ட ஆட்சியரும் அதிகாரிகளும் தினமும் போய் பேச்சுவார்த்தை நடத்தினர். வரிசை வரிசையாக நாற்காலி போட்டு அமர்ந்து மணிக்கணக்கில் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகளும் ஒரு வகையில் இந்த அழித்தொழிப்பில் பங்கெடுத்தவர்கள்தான். அளவுதான் கூடக் குறைய இருக்கும். மொட்டையாண்டியின் வயல்வெளி எங்கும் ஏறி நசுக்கியிருக்கிற எத்தனையோ வண்டிச்சக்கரங்களின் தடங்களில் தமிழ்நாடு அரசு வாகனத்தின் டயர் தடம் மட்டும் தனியாகவா தெரியப் போகிறது?


_சு.வெங்கடேசன்



(சுவர் இடிக்கப்பட்ட பிறகு தலித்துகளின் முகத்திலா விழிப்பது என்று வீட்டைப் பூட்டி வெளியேறி வனவாசம் கிளம்பிய உத்தப்புரம் சாதிவெறியர்கள் வந்து ஆக்ரமித்த தோப்புகளும் தோட்டங்களும் தலித்துகளுடையது....)



(சாதிக்கொழுப்பால் மெழுகிக் கட்டிய தங்கள் சுவரை இடித்துவிட்டார்களே என்ற கவலையில் அன்னம் தண்ணி ஆகாரமில்லாமல் காய்ந்து தீய்ந்து கருவாடாய்க் கிடக்கவில்லை பிள்ளைமார்கள். தலித்துகளின் மூத்திரத்தில் வளர்ந்திருந்த வேப்பந்தோப்பின் நிழலில் அண்டா அண்டாவாக ஆக்கி அவித்து தின்று கொழுத்தார்கள் என்பதற்கு வேறென்ன சாட்சி வேண்டும்?)





(அகிம்சா வழியில் உத்தப்புரம் பிள்ளைமார் போராடிக்கொண்டிருப்பதாக புளுகிக் கொண்டிருந்தன ஊடகங்கள். அவர்களது அகிம்சையின் உக்கிரத்தில் தகர்த்து வீழ்த்தப்பட்ட தலித் மொக்கையாண்டி- லட்சுமி குடும்பத்தின் வாழ்விடமாம் குடிசை.)


இருபதுஅடி சுவற்றை இடித்ததற்காக இன்னும் எதையெல்லாம் இடிக்கக் காத்திருக்கிறார்களோ...? குடிசையை இழந்த சோகத்தில் வெடித்தழும் லட்சுமி ....




அழும்புகளைப் பார்வையிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள்....













(உண்ட வீட்டுக்கு ரண்டகம். தலித்துகளின் தோப்பில் தங்கியிருந்த உத்தப்புரம் சாதிவெறியர்கள் அங்கிருந்த நிழல்தர மரங்களை வெட்டியெடுத்துப் போயுள்ளனர்.. இந்த மரத்திருடர்களுக்கு என்ன தண்டனை?)




(மலையடிவாரத்திலிருந்த தலித் வெள்ளையம்மாள் வீட்டையும் சூறையாடியிருக்கிறார்கள் பிள்ளைமார். எதையெல்லாம் அள்ளிக்கொண்டு போயிருக்கிறார்கள் என்பது இனிதான் தெரியும்.)



தலித்துகளின் கழிவுகளைத் தின்று வளர்ந்திருந்த நாட்டுக்கோழிகள் 150 ம் இப்போது பிள்ளைமார் வயிற்றில். றெக்கைகளை தின்ன முடியாதென்பதால் விட்டுப் போயிருக்கின்றனர்.






தலித் நாகராஜ் தோட்டத்தில் அடித்து உடைக்கப்பட்ட பாசன பைப்.


(குடும்ப அட்டையை திருப்பித் தந்துவிட்டதற்காக குடிமக்கள் இல்லை என்றாகிவிடுமா? மலையடிவாரம் முழுக்க இறைந்து கிடக்கும் டாஸ்மார்க் பாட்டில்கள்.)




சேதப்படுத்தப்பட்ட சாமந்தித் தோட்டம்




சோளநாத்தும் தப்பவில்லை.



நாகராஜ் வீட்டையும் சூறையாடிப் போயுள்ளனர். அவர்கள் எடுத்துக் கொண்டு ஓடியதுபோக எஞ்சியப் பொருட்கள் இறைந்து கிடக்கின்றன.

படங்கள்: சு.வெங்டேசன்

அடிக்குறிப்புகள்: ஆதவன் தீட்சண்யா
e-mail: visaiaadhavan@yahoo.co.in

thanks...

pls click

www.keetru.com

Sunday, May 18, 2008

அவமானச் சுவர்





16 உடைகற்களும், 1600 போலீசாரும்





இக்கட்டுரை கணிணியில் ஏற்றப்படும் இன்று உத்தரப்புரம் தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்ட 7ம் நாள்(12.5.2008). இன்று வழக்கம்போல் மாவட்ட ஆட்சியர் மலையடிவார விரும்பிகளிடம் சமாதானம் பேசப்போவார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கார் பவனி உசிலம்பட்டி ரோட்டில் நடந்தபடி இருக்கும். உறவின்முறையிலிருந்து உணவுப்பொருட்களும் பணமும் கொண்டுபோய் கொடுத்தபடி இருப்பார்கள். எல்லாவற்றையும் பார்த்து ரசித்து, வாங்கிக்கொண்டு சட்டைக் காலரை தூக்கிவிட்டபடி அவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பார்கள். கைவசம் 10 லட்சம் ரூபாயும், 30 நாட்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களும் இருப்பதை மறைத்து கஞ்சி காய்ச்சிக் குடிக்கும் கலர் புகைப்படம் ஒன்று நாளைய பத்திரிகையில் வெளிவரும்.

ஆனால் தலித் மக்களோ சுற்றிலும் நிகழும் பதற்றம் காரணமாக ஊரைவிட்டு வெளியேற முடியாமல் ஊருக்குள்ளே இருந்தபடி தோழர்களையும் கட்சி அலுவலகத்தையும் தொடர்புகொண்டு சதா பேசி தங்களுக்கான நம்பிக்கையை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய போராட்டக் களத்தில் கடைசி வரிசையில் நிற்கிற ஒருவனாக இருந்தாலும் இதனைப் பெறுவதற்கான வாய்ப்போ மனநிலையோ ஏற்படுவதில்லை. ஆனால் ஊடகங்கள் மலையடிவாரவாசிகளுக்காக வடிக்கின்ற கண்ணீரும், அரங்கேற்றுகிற வஞ்சகமும் பொறுக்கமுடியாமல் எப்படியாவது இதை உடனடியாக எழுதவேண்டும் என்ற முடிவோடு எழுதுகிறேன்.

உத்தப்புரம், அங்குள்ள தலித்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை, அதற்கெதிரான போராட்டம், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், அதிலிருந்து அவர்கள் பெற்ற படிப்பினை. இன்று புதுநம்பிக்கையோடு மீண்டும் எழுச்சிபெற்று அவர்கள் நடத்தும் போராட்டம் என அனைத்தையும் பற்றிய சிறு குறிப்பே இக்கட்டுரை.

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராம ஊராட்சி உத்தப்புரம். இங்கு வாழும் சமூகத்தினுடைய குடும்பங்களின் எண்ணிக்கை: கொடிக்கால் பிள்ளைமார்-450, பள்ளர்-650, கவுண்டர்-150, பறையர்-25, மூப்பர்-75, அருந்ததியர்-30, பிரமலைக்கள்ளர்-5, நாயக்கர்-30, ஆசாரி-3, வண்ணார்-20, மருத்துவர்-6, செட்டியார்-5, சைவப்பிள்ளைமார்-1. மொத்த மக்கள் தொகை......... பிரதான அரசியல் கட்சிகள் அதிமுக, திமுக, புதிய தமிழகம், பாரதீய ஜனதாக்கட்சி.

இக்கிராமத்தில் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், அதன் பொருட்டு நிகழும் எதிர்ப்பு நடவடிக்கைகள், அந்த வாய்ப்பை சாதிக்கலவரமாக மாற்றும் ஆதிக்க சாதிகள் என பல்லாண்டுகளாக பிரச்சனைகள் தொடர்ந்து நிகழ்ந்து வந்தபடி இருக்கிறது. 1948, 1964 ஆகிய ஆண்டுகளில் தலித்மக்கள் மீது நடந்த தாக்குதல்களும் அதனைத் தொடர்ந்து நடந்த மோதல்கள் பற்றிய விபரங்களும் என் கைவசம் இல்லை. மக்களின் நினைவுப் பகுதியிலிருந்து மட்டுமே அதன் தன்மையை உணர முடிகிறது. ஆனால் 1989ல் நடந்ததைப் பற்றி விரிவாக எழுத முடியும்.

1

உத்தப்புரம் தலித் மக்கள் கும்பிடும் சாமி கருப்பசாமி. பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கும்பிடும் சாமி முத்தாலம்மன். தலித்துகள் தங்களது சாமியான கருப்பசாமியை கும்பிடும் முன் தங்களின் முன்னோர்கள் நட்டு வைத்த அரசமரத்தைக் கும்பிட்டு மூன்று முறை சுற்றி வந்து பின்னர்தான் கருப்பசாமியை வணங்கச் செல்வது வழக்கம். அந்த அரசமரம் பிள்ளைமார்களின் கோவிலான முத்தாலம்மன் கோவிலுக்கு நேர் எதிரே சில பத்தடி தூரத்தில் உள்ளது. தலித் மக்கள் தங்களின் கோவிலுக்கு முன்னால் வந்து சாமி கும்பிட்டு, சாமியாடி கொட்டு கொட்டிச் செல்வதைப் பொறுக்கமுடியாமல், இந்த அரசமரத்திற்கு நீங்கள் வரக்கூடாது, வந்தால் அடி உதைதான் கிடைக்கும் என பிள்ளைமார்கள் களத்தில் இறங்கினர்.

தலித் மக்கள் தங்களின் வழி வழி வந்த உரிமைக்காகப் போராடினர். போராட்டத்தின் வடிவம் கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமானது. இறுதியில் 1989ம் ஆண்டின் துவக்கத்தில் அது மோதலாக உருமாறியது. இந்த மோதலின் காரணமாக காவல்துறையால் 131 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பெரும்பான்மையானவர்கள் தலித்களே. ஆனால் மோதலுக்குப் பின் பிரச்சனைகளில் தலையிட்டு நியாயம் வழங்கவேண்டிய அரசு நிர்வாகம் சாதியை ஆடையாகவும் ஆன்மாகவும் கொண்டு செயல்பட்டதால், தலித்களின் உரிமைக்கான இந்த சிறு எதிர்ப்பை பொறுக்க முடியாமல் சுத்துப்பட்டு கிராமத்தில் இருந்த ஆதிக்கசாதிகளெல்லாம் தோள்தட்டிக்கொண்டு களத்திலே இறங்கின. தலித்களில் முக்கியமானவர்கள் எல்லாம் கைதான பின்னணியில் அதிகாரிகளும் ஆதிக்க சாதியினரும் சேர்ந்து தயாரித்த ஒப்பந்தம்தான் இன்றைக்கு “மகத்தான சாசனமாக” சாதி இந்துக்களாலும் சில அதிகாரிகளாலும் கொண்டாடப்படும் 1989ம் ஆண்டு ஒப்பந்தம்.

இந்த ஒப்பந்த ஷரத்துகள் சொல்லும் உண்மை

1. பரம்பரை பரம்பரையாக தலித்கள் சாமி கும்பிட்டு வந்த அரசமரத்தடியில் அவர்கள் பிரவேசிக்க எந்த பாத்தியதையும் இல்லையென அறிவித்தது. அதாவது எங்களது சாமிக்கு முன் நீயோ உனது சாமியோ வரவோ நிற்கவோ கூடாது என்ற சாதித் திமிர் சட்டமானது.

2. தலித்களின் கோவிலான கருப்பசாமி கோவிலுக்குச் செல்லும் பாதையை அடைத்து அரசமரத்தை உள்ளடக்கி தலித்கள் பிரவேசிக்க முடியாதவண்ணம் சுவர் எழுப்பப்பட்டது. அதுவரை தலித்கள் தங்கள் குலதெய்வத்தை வணங்கச் சென்று கொண்டிருந்த பாதை நிரந்தரமாக மூடப்பட்டது.

3. பிள்ளைமார் தரப்பில் யாராவது இறந்தால் சுடுகாட்டிற்குச் செல்ல வேறுபாதை இருந்தும் தலித் பகுதி வழியாக வந்து அந்த பாதையின் உரிமையை நிலைநாட்டி, நீ சாமி கும்பிட தோரணங்கள் கட்டியிருந்தாலும், எங்கள் சவம் வரும்பொழுது அதை எடுத்துவிடவேண்டும். இல்லையென்றால் எங்களது சவம் தீட்டாகிவிடும் என்று தங்கள் சவத்தின் புணிதத்தை நிலைநாட்டியது.

ஏறக்குறைய கிராமத்தின் பொதுப்பயன்பாட்டில் தலித்களுக்கு இருந்த அனைத்து பொது உரிமைகளையும் நிராகரித்து எழுதப்பட்ட ஒப்பந்தமானது முழுக்க முழுக்க ஆதிக்க சாதிகளின் கட்டப்பஞ்சாயத்து மூலமே உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் தலித்கள் சார்பில் கையெழுத்திட்ட 5 பேரில் மூவர் இறந்துவிட்டனர். ஒருவர் மிகவும் வயோதிக நிலையில் உள்ளார். மீதமிருக்கும் ஒருவர்தான் இப்பொழுது தலித் மக்களின் ஊர்ப்பெரியவராக இருக்கிற கே.பொன்னையா. இவரிடம் ஒப்பந்தம் பற்றி கேட்டபொழுது “எங்கள் ஐந்துபேரையும் தூக்கிக்கொண்டு போய் சினிமா தியேட்டர்ல வெச்சு, கையெழுத்து போடாவிட்டால் இங்கிருந்து உயிரோடு போகமுடியாது என மிரட்டி கையெழுத்து வாங்கினர். சுத்துப்பட்டு கிராமப் பெரியவர்கள் எல்லாம் கூடியிருந்த சபையில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை” என்றார்.

இந்த ஒப்பந்தத்தில் பஞ்சாயத்தார்கள் என்று 23 பேர் கையொப்பமிட்டுள்ளனர். அதில் 22 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஒரே ஒருவர் மட்டும்தான் தலித் (எண்:15 இளையசாமி S/o சமையன், மல்லப்புரம்). இவர் காங்கிரஸ் கட்சியின் அந்தப் பகுதியின் எஸ்.சி, எஸ்.டி பிரிவின் தலைவர். அவர்களுடனேயே எப்போதும் அனுசரணையாக இருப்பவர். எனவே அவர் அந்த கூட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பஞ்சாயத்தார்களிடம் இதைத் தவிர தலித்களுக்கு வேறென்ன தீர்ப்பு கிடைத்திருக்கும்? தங்களது சாதி ஆதிக்கத்தையே தீர்ப்பென எழுதி தலித்களிடம் அவர்கள் கையெழுத்தைப் பெற்றனர்.

தீர்ப்புரையின் கடைசியில் “இந்த ஒப்பந்தத்தின் நகல்களை இரு தரப்பினரும் வைத்துக் கொள்வதென்றும், மூலப்பத்திரம் போலீசிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும்” எழுதப்பட்டுள்ளது. அப்படியென்றால் இதை உருவாக்கியதில் காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தின் பங்கு என்ன? என்று விசாரித்தபொழுது உண்மையான முடிச்சு அவிழ்ந்தது. மாவட்டத்தின் உயர் அரசு அதிகாரிகளின் முன்னிலையில்தான் இந்த ஒப்பந்த ஷரத்துகள் உருவாக்கப்பட்டதாகவும், அதன் பின்னர்தான் தியேட்டரில் நாட்டுக்கூட்டம் போட்டு தலித்களிடம் கையொப்பம் பெறப்பட்டதாகவும், இந்த முழு நடவடிக்கையிலும் ஈடுபட்டு இன்று பணி ஒய்வில் இருக்கிற அரசு ஊழியர் ஒருவர் தனது சங்க உணர்வின் மிச்சமிருக்கும் கடமைகளில் ஒன்றெனக் கருதி இப்பொழுது சொல்லித் தொலைத்தார்.

தலித்களின் பயன்பாட்டு உரிமைகள் அனைத்தையும் மறுத்து உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் தலித்கள் நடக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். அதுவரை அரசமரத்தை ஒட்டி பஸ் நிறுத்தம் இருந்தது. அது அங்கேயே இருக்குமானால் பஸ்சை விட்டும் இறங்கும் தலித்கள் அரசமரப் பகுதிக்கு வர நேரிடும். இது ஒப்பந்தத்தை மீறுவதாகும் என்பதால் அரசமரத்து பஸ் நிறுத்தம் ஒரு பர்லாங் தூரத்திற்கு தள்ளிக் கொண்டு போகப்பட்டது. இந்நிலையில் 2.8.89ம் ஆண்டு புது பஸ் டிரைவர் ஒருவர் பழைய இடத்தில் பஸ்சை நிறுத்தியதும் உள்ளே இருந்த தலித் ஒருவர் இறங்கி நடக்க அரசமரத்தடியில் உட்கார்ந்திருந்த பிள்ளைமார்கள் அந்த தலித்தின் மீது கல்வீசி தாக்குதலைத் தொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து மோதல் உருவானது. இத்தோடு இவர்களை ஒழித்துக்கட்ட வேண்டுமென்று சுத்துப்பட்டு கிராமத்தின் ஆதிக்க சக்திகள் எல்லாம் உத்தப்புரம் தலித்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்தனர். பெரும் மோதலில் இரண்டு பக்கமும் இரண்டிரண்டு பேர் கொலை செய்யப்பட்டனர். காவல்துறை நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தலித்கள் கொல்லப்பட்டனர். மூன்று தலித் பெண்கள் படுகாயமடைந்தனர். பெரும் அழிவும் தீ வைப்பும் நடந்து முடிந்தது. தங்களது உரிமையை மறுத்துப் போடப்பட்ட ஒப்பந்தம், அதை மீற முயன்றால் பெரும் பொருட்சேதம் என தலித்கள் துயரத்தின் பாதளத்திற்குத் தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தில் தலித்களின் அரசமர வழிபாட்டு உரிமையையும் கோவிலுக்கு செல்லும் பாதையையும் மறித்து சுவர் எழுப்பியவர்கள் இப்பொழுது தலித்கள் நடந்து செல்லும் மூன்று பொதுப் பாதைகளை அடைத்து சுமார் 300 மீட்டருக்கு பெரும் தடுப்புச் சுவரை எழுப்பினர். எங்கள் பகுதியில் உன் காலடி கூட படக்கூடாது என தலித்களை துண்டாக்கினர். அவர்களின் கருத்தை அப்படியே ஏற்ற அரசு, பொதுத்தண்ணீர் தொட்டியிலிருந்து பிரித்து தலித்களுக்கு தனித் தண்ணீர் தொட்டி அமைத்தது. ஊர்ப் பொது பள்ளிக்கூடத்திலிருந்து தலித் மாணவர்களுக்கென்று தனியாக பிரித்து ஒரு தலித் பள்ளிக்கூடத்தை அமைத்தது. பால்வாடியை தனியாக்கியது. ரேசன்கடையைப் பிரித்தது. இவைகளை எல்லாம் ஏற்க முடியாது என்று சொல்லவோ, புகார் செய்யவோ தலித்களுக்கு நாதியில்லை. ஏனென்றால் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட புறக்காவல் நிலையம் பிள்ளைமார் ஒருவரின் வீட்டிலே இருந்தது. அந்தத் தெருவில் தலித்கள் அதுவரை நடந்ததே இல்லை.

இந்தப் பெரும் கலவரம், அதனால் ஏற்பட்ட இழப்புகள், இந்த கலவரத்தைத் தொடர்ந்து அரசு அப்பட்டமாக எடுத்த சாதி இந்துக்களுக்கு ஆதரவான நிலைப்பாடு, இவையனைத்தும் தலித்களை மீடேற முடியா நிலைக்குத் தள்ளியது. வழிபாட்டு உரிமையை 89ம் ஆண்டு ஒப்பந்தத்தின் பெயரைச் சொல்லி உருவாக்கப்பட்ட சுவர் அடைத்து நின்றது. பொதுப்பாதையை 4 தலித்களைப் பலியெடுத்த வெற்றியின் பெயரால் ஆதிக்கசாதிகளால் கட்டியெழுப்பப்பட்ட நெடுஞ்சுவர் மறைத்து நின்றது. தலித்களின் குழந்தைகள் மட்டுமே படிக்க பள்ளி உருவாக்கப்பட்டு விட்டது. பிற சாதிக்காரனுக்கு பக்கத்தில் உட்காராமல், அவனைத் தொடாமல், அவனோடு பேசாமல், அவனோடு உணவையோ, உணர்வையோ பகிர்ந்து கொள்ளாமலே உத்தப்புரம் தலித் குழந்தைகள் கடந்த 19 ஆண்டுகளாக பள்ளிப்படிப்பை முடித்து சாதீயத்தின் அருவருப்பு மிக்க துண்டாடலை பள்ளிக்கூடத்தின் வழியிலேயே அனுபவித்து வெளியேறுகின்றனர்.

2

மதுரை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி 2008 பிப்ரவரி 9ம் தேதியன்று 47 மையங்களில் கள ஆய்வு நடத்தியது. எந்தெந்த வடிவங்களில் தீண்டாமைக் கொடுமை நிலவுகிறது என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு பிப்.22ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி ஆய்வின் விவரங்கள் வெளியிடப்பட்டது. மார்ச் 25ம் தேதி பெரும்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு ஆய்வின் முடிவுகள் மாவட்ட ஆட்சியரிடம் தரப்பட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

கட்டப்பட்டு 15 ஆண்டுகளாக வெளியுலகின் பார்வைக்கு தெரியாமல் இருந்த உத்தப்புரம் “தீண்டாமைச்சுவர்” இந்த கள ஆய்வில் தான் தெரியவந்தது. அதன்பின் ஓரிரு ஊடகங்கள் அதன்மீது கவனம் கொள்ளத் துவங்கின. ஏப்.17ம் தேதி அந்த சுவற்றின் மீது மின்சார வேலி அமைக்கப்பட்டதாக இந்து நாளிதழ் படத்துடன் செய்தி வெளியிட்டது. அன்றே மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். உடனே மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி அந்த மின்வேலியை ஒரு பர்லாங் தூரத்திற்கு அப்புறப்படுத்தப்படும் என்று உத்தரவிட்டார்.

அது ஏதோ, வயரிங் சம்பந்தப்பட்ட பிரச்சனைபோல அரசு சட்டமன்றத்தில் பதில் சொன்னது. அந்த மின்வேலி அமைக்கப்பட்டது உண்மையா? அப்படியென்றால் யாரால், ஏன் அமைக்கப்பட்டது? அப்படியொரு தடுப்புச்சுவர் எதனால் இருக்கிறது? அதை ஏன் தாண்ட வேண்டுமென்று ஒரு பகுதியினர் கருதுகின்றனர். தாண்டவே விடக்கூடாது என்று ஒரு பகுதியினர் ஏன் துடிக்கின்றனர் என்பதைப் பற்றியெல்லாம் ஆட்சியாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. வேலியைத் தூக்கி வெளியில் போடு என்பதோடு அவர்கள் வேலை முடிந்துவிட்டது.

ஆனால் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் இறங்கியது. மறுநாள் ஏப்.19 அன்று மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உடனடியாக சுவர் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினர். ஆனால் பலனேதும் இல்லை. ஏப்.29ம் தேதி பேரையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இரண்டாயிரம் பேர் பங்கேற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தி உடனடியாக சுவரை இடி.. அல்லது நாங்கள் இடிப்போம் என்று முழங்கியது. அதுவும் மாவட்ட நிர்வாகத்தின் காதிலே விழவில்லை. பின்னர் தீண்டாமைச் சுவரை பார்த்து காறி உமிழ மே 7ம் தேதி கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ்காரத் வருகிறார் என ஏப்.30ம் தேதி அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பு சென்னையிலே இருக்கிற தலைமைச் செயலகத்திற்கு கேட்டதன் விளைவு மதுரை மாவட்ட நிர்வாகத்தின் காதிலும் விழுந்தது. வேறு வழியேயில்லாமல் மே 2ம் தேதி உசிலம்பட்டி கோட்டாட்சியர் முன்பு பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதாவது பிரச்சனை அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு 67 நாட்களுக்குப் பிறகுதான் அரசு பேச்சுவார்த்தைக்கு வந்தது. பேச்சுவார்த்தை மே 2 மற்றும் 4 ஆகிய இரு தேதிகளில் மட்டுமே நடந்தது. அதுவும் கோட்டாட்சியர்தான் நடத்தினார். மாவட்ட ஆட்சியர் அதில் உட்காரவில்லை. அவருக்கு “நிறைய்ய்ய......” பணிகள் இருந்தன.

இறுதியாக பிரகாஷ்காரத் வருவதற்கு முன் “ஏதாவது செய்” என்ற மேலிட உத்தரவிற்குப் பணிந்து மே 5ம் தேதி உத்தப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் எழுந்தருளினார். கையில் பலவகையான வரைபடத்தை வைத்துக் கொண்டு ஊரைச் சுற்றி சுற்றி வந்தார். ஊர் இரண்டாக இருந்ததை அவர் கண்டுபிடித்தார். இதை சரிசெய்ய ஏதாவது செய்ய வேண்டுமென்று நடுவீதியில் நின்று தீவிரமாக யோசித்தார். பல போஸில் அவரது புகைப்படம் மறுநாள் பத்திரிகைகளில் வெளியானது. இறுதியில் மே 6 அன்று காலை சுமார் 7.45 மணியளவில் 19 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பஞ்சாத்தார்களால் முடிவு செய்யப்பட்டு, சாதிவெறியர்களால் சட்டத்திற்கு எதிராக கட்டப்பட்ட 600 மீட்டர் சுவரில் 4 மீட்டர் அகலம் கொண்ட ஒரு இடத்தைத் தேர்வுசெய்து (அவர்கள் தேர்வு செய்த இடத்தில் சுவரின் உயரம் 3 அடி மட்டும்தான். மீத உயரம் சில ஆண்டுகளுக்கு முன் தானாகவே இடிந்துவிட்டது.)

சுமார் 1600 போலீசார் பாதுகாத்து நிற்க அந்த சின்னஞ்சிறு கிராமத்தின் சின்னஞ்சிறு சுவற்றின் 16 உடை கற்களை பெயர்த்து எடுத்தது அரசு. ஒரு கல்லுக்கு 100 போலீசார் வீதம் 1600 போலீசாரும் சாலையெங்கும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். சுவற்றின் ஒருபுறம் பிள்ளைமார்களின் பயன்பாட்டில் இருந்த சிமெண்ட் சாலை, சுவற்றின் மறுபுறம் தலித்கள் குடியிருக்கும் பகுதி - இரண்டையும் இணைத்து 50 மீட்டர் நீளத்திற்கு செம்மண் கொட்டி சாலையமைக்கப்பட்டது.

மறுநாள் பிரகாஷ்காரத் வந்தது உத்தப்புரத்து தீண்டாமைக் கொடுமையையும் அதற்கெதிரான போராட்டத்தையும் உலகறியச் செய்தது. இந்தச் சின்னஞ்சிறிய சுவர் உடைப்புக்கு எதற்காக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் என பேசியவர்கள், அடுத்தடுத்த நாட்களில் நிகழ்ந்ததைப் பார்த்து வாயடைத்துப் போனார்கள். எடுக்கப்பட்ட 16 கற்களின் வலிமை அதன்பின் தான் உலகிற்கு தெரிய ஆரம்பித்தது.

302 ரேசன் கார்டுகளை தூக்கியெறிந்துவிட்டு “எங்களுக்கு பாதுகாப்பில்லை... பாதுகாப்பில்லை...பாதுகாப்பில்லை...” என்று கத்திக் கொண்டே ஊரைவிட்டு வெளியேறி தாழையூத்து மலையடிவாரத்திற்கு ஓடின 200 குடும்பங்கள். வடக்குத்தெரு மொத்தமும் காலியானது. அவர்களின் கதறல் ஒரே நாளில் எட்டுத்திக்கும் கேட்டது. 19 ஆண்டுகளாக தொண்டை கிழிய, நரம்பு விடைக்க கத்தியும் யார் காதுக்கும் கேட்காமலிருக்க இது அடக்கப்பட்ட சாதியின் குரலல்ல. இது ஆதிக்கசாதியின் குரல். அதற்கேயுரிய வலிமையோடு அது எதிரொலித்தது.

எங்கெங்கிருந்தெல்லாமோ ஆதரவு சக்திகள் திரண்டுவந்தனர். ஆதரிக்க வேண்டிய தலித் தலைவர்களே எதிர்த்து அறிக்கைவிட இது ஒன்றும் அடக்கப்பட்ட தலித்களின் குரலல்ல. ஆண்டப் பரம்பரைகளின் குரல். எனவே எட்டுத்திக்கும் ஆதரவு பெருகி வந்தது. ஆட்சியர் அலுவலகம் கிடுகிடுத்தது. காரை எடுத்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் புறப்பட்டார் மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கு தேசிய நெடுஞ்சாலையில், அங்கிருந்து உத்தப்புரத்திற்கு வழிநெடுக நிறுத்தப்பட்ட போலீசின் நடுவே, மாவட்ட மற்றும் ஊரக நெடுஞ்சாலையில், அங்கிருந்து மெட்டல் சாலை கூட இல்லாத மோசமான குண்டும் குழியுமான பகுதியில் ஒரு கிலோமீட்டர், பின் அங்கிருந்து கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையென நடந்தே ஒன்றரை கிலோமீட்டர் வியர்த்து விறுவிறுக்க மலையடிவாரம் வந்துநின்றார்.

67 நாள் காட்டுக்கத்து கத்தியும் வராமலிருக்க இது ஒன்றும் அடக்கப்பட்ட தலித்களின் குரலல்ல. ஆதிக்கசாதியின் குரல். எனவே அவரே வந்தார். 6 மணி நேரத்திற்குள் வந்தார். காடு மலை கடந்து நடந்தே வந்தார். அவர்கள் இருக்குமிடம் தேடிவந்தார். யார் வந்தாலும் அவர்கள் கத்துவதை நிறுத்தவில்லை. “எங்களுக்கு பாதுகாப்பில்லை... பாதுகாப்பில்லை...பாதுகாப்பில்லை...”என்று கத்திக்கொண்டேயிருந்தனர். 16 உடைகற்களை எடுத்ததால் உங்களுக்கு ஏற்பட்ட பாதுகாப்பின்மைதான் என்ன? என்று கேட்க முதுகெலும்புள்ள யாரும் அங்கு செல்லாததால் அவர்கள் கத்திக்கொண்டேயிருந்தனர்.

ஊடகப்புலிகள் கேமிராக்களை தூக்கிக்கொண்டு ஓடியபடியே இருந்தனர். மூன்று குழந்தைக்கு அம்மை விளையாண்டு விட்டது. இரண்டு குழந்தைக்கு வயிற்றுப்போக்கானது. பொது சுகாதாரம் கெட்டுப்போய் கிடக்கிறது என்று ஆளாளுக்கு நீலிக்கண்ணீர் வடித்தனர். ஊரின் மொத்த சாக்கடை தலித்களின் வீடுகளுக்கு நடுவேதான் போய்க்கொண்டிருக்கிறது. அந்த சாக்கடைக்கு மூடிபோடு என்று கோரிக்கை வைத்துப் போராடும் தலித்களைப் பற்றி 7ம் தேதிக்குப்பின் ஒரு பத்திரிகைகூட படத்தையோ, செய்தியையோ (தீக்கதிர் தவிர) வெளியிடவில்லை. ஆனால் மலையடிவார விரும்பிகளின் ஒரு நூறு புகைப்படங்கள் தமிழகம் எங்கும் பிரசுரமாகிக் கொண்டேயிருக்கிறது. ஊடகங்களின் சாதி மற்றும் சனநாயகப்பற்றுக்கு இதைவிட இன்னொரு எடுத்துக்காட்டு தேவையில்லை.

19 ஆண்டுகளுக்குப்பின் 16 கற்களை எடுத்ததால் ஏற்பட்ட பதற்றம் தணிக்க அரசு தலையைப் பிய்த்துக் கொண்டு நிற்கிறது. “எங்களுக்கு பாதுகாப்பில்லை... பாதுகாப்பில்லை...”என்று கத்தியவர்கள் வழக்கம்போல் தங்களது பணிகளை திட்டமிட்டுச் செய்தார்கள்.




மே 7 அன்று காரத் வந்து சென்றபின் மே 8ம் தேதி பக்கத்து கிராமமான கோடாங்கி நாயக்கன்பட்டியிலிருந்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலையை விஷமிகள் அவமரியாதை செய்தனர். அதிகாலையிலேயே செய்தி பரவத் தொடங்கி பதற்றம் உருவானது. உசிலம்பட்டி பகுதியெங்கும் பஸ்கள் ஓடவில்லை. கடையடைப்பு, கல்வீச்சு, மறியல் என சொல்லிவைத்த சூத்திரத்தை சம்பந்தப்பட்டவர்கள் அரங்கேற்றி முடித்தனர். பிள்ளைமார்களுக்கு எதிராக தலித்கள், தேவர்களுக்கு எதிராக தலித்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் என்றுகாட்ட ஒரே நேரத்தில் எல்லாக் காய்களும் நகர்ந்தன. உத்தப்புரம் பிள்ளைமார்களுக்கு ஆதரவான போராட்டமும், தேவர் சிலை அவமதிப்புக்கு எதிரான போராட்டமும் தினமும் ஒவ்வொரு பக்கமாக மாறி மாறி சங்கிலித் தொடர்போல் பின்னியபடி நடத்தப்பட்டது.

மதவெறியர்களும் சாதிவெறியர்களும் ஒன்று சேர்ந்தனர். 89 கலவரத்தில் உத்தப்புரம் பிள்ளைமார்களுக்கு ஆதரவாக களமிறங்கிய கோடாங்கிநாயக்கன்பட்டி, பாறைப்பட்டி, எருமார்பட்டி, ராஜக்காபட்டி, மானூத்து ஆகிய கிராமங்களில் உள்ள ஆதிக்க சக்திகள் இப்பொழுது மீண்டும் களத்திலே இறங்கியுள்ளன. பசும்பொன் தேவரின் சிலை அவமதிக்கப்பட்ட கோடாங்கிநாயக்கன்பட்டியில் வசிக்கும் தலித் குடும்பத்தின் எண்ணிக்கை-1, தேவர் குடும்பத்தின் எண்ணிக்கை-200. இந்த ஒரு புள்ளிவிபரம் போதும் உண்மையை விளக்க. இதற்குமேல் எத்தனை பக்கம் எழுதினாலும் அது உபரித்தகவல்தான்.

அன்றிரவு தேவர்சிலைக்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் மீது என்ன நடவடிக்கை? காலையில் விஷயம் தெரிந்ததும் வெறிபிடித்தது போல் பஸ்சை உடை, மறியல் செய் என்று போலீசார் கத்தவேண்டிய காரணமென்ன? சிலையை மோப்பம் பிடிக்க போலீசின் மோப்பநாய் வருகிறது எனத் தெரிந்தவுடன் அவசர அவசரமாக சிலையை கழுவிய இரண்டுபேரின் பெயரைச் சொல்லியும் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதேன்? அவர்கள் ஒரு கட்சியின் தலைவர்கள் என்பதாலா? எதிரிக்கு சாதகமாகி விடக்கூடாது என்று சொல்பவர்களின் பதிலை நாம் மௌனமாகக் கேட்கிறோம். இதில் யார் எதிரிகள் என்பது நமக்கு நன்றாகவே தெரிகிறது.

சாதக பாதக கணக்குகளை போட்டபடி சில அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றன. மலையடிவார விரும்பிகளுக்கு தேவையான பொருளும் ஆதரவும் வந்த குவிந்தபடி இருக்கின்றன. மாவட்ட நிர்வாகம் வளைந்து, குழைந்து, பணிந்து என்ன வேண்டுமானாலும் செய்கிறோம், தயவுசெய்து மிகக்கடினமான வனவாசத்தை விட்டிறங்கி நீங்கள் கட்டிய வீட்டில் நீங்களே வந்து குடியேறி எங்கள் ஆட்சிக்கு பெருமை சேருங்கள் எனத் தவமாய் தவமிருக்கிறது. அவர்கள் மலையின் மீதிருந்து பேச ஆரம்பித்தார்கள். ஜனநாயகம், சமத்துவம், சட்டம் அனைத்தையும் புதைத்த புதைகுழியின் மீது நின்று அரசும் அவர்களும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

மே 6ம் தேதி திறக்கப்பட்ட பாதையின் வழியே தலித்கள் நடக்கலாம். ஆனால் ‘பிணங்களைத் தூக்கி வரக்கூடாதென்று’ நடந்தே தங்கள் இருப்பிடத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வந்த கலெக்டரிடம் முதல்நாள் கோரிக்கை வைத்தவர்கள், மூன்றாம் நாள் ‘திறக்கப்பட்ட பாதையைப் பயன்படுத்துவது சம்பந்தமாக சுத்துப்பட்டு கிராமப் பெரியவர்களை கேட்டு எடுக்கிற முடிவை தாழ்த்தப்பட்டவர்கள் ஏற்க வேண்டும்’ என்ற அளவிற்குப் போயுள்ளனர். தலித்களின் வழிபாட்டு உரிமையை மறுத்துக் கட்டப்பட்ட சுவரை அகற்றாமல் அது உள்ளிட்ட தங்களது கோவில் பகுதி முழுவதுக்கும் பட்டா வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர். இவையனைத்தையும் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக எவ்வித பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் மாவட்ட நிர்வாகம் எழுதிக் கொடுக்கிறது. “சட்டத்தின் ஆட்சி” என்று சொல்வதை விட அயோக்கியத்தனமான வார்த்தை வேறெதுவும் இருக்க முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது.

3

உத்தப்புரம் தலித்களுக்கு எதிரான அனைத்துக் கொடுமைகளும் மீண்டும் மீண்டும் அரங்கேறியபடியே இருப்பதற்கு பிரதான குற்றவாளியாக பொறுப்பேற்க வேண்டியது மாநில அரசே.

அ. அரசியல் சட்டம் வழங்கியுள்ள சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டிய அரசு அதற்கு நேர் எதிராக கட்டப்பஞ்சாயத்து மூலம் 1989ல் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தை சட்டவிரோதம் என்று பார்க்கவில்லை. அந்த ஒப்பந்தத்தை உருவாக்க அதுவே காரணமாக இருந்தது. ஒப்பந்தத்தின் மூலப்பத்திரத்தை போலீஸ் ஸ்டேசனில் வைத்து 19ஆண்டுகளாக அதுவே பாதுகாத்து வந்துள்ளது.

இப்பொழுது கூட அது சட்ட விரோதமான ஒப்பந்தம் என்று சொல்வதற்கு அரசு தயாராக இல்லை. பேச்சுவார்த்தையின் பொழுது “உங்க அப்பங்கெ போட்ட கையெழுத்துக்கு நீங்கதான் பொறுப்பு” என்று வெளிப்படையாக அரசு அதிகாரிகள் பேசியதைப் பார்க்க முடிந்தது. ஊர் மந்தையில் சாதித் திமிரோடு உட்கார்ந்து பேசுகிறவனுக்கும் இவர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் கூடுதலாக அதிகாரி என்ற திமிரும் சேர்ந்திருப்பது மட்டும்தான்.

ஆ. 1989 ம் ஆண்டு ஒப்பந்தத்திற்கு பின் பிள்ளைமார் நெடுஞ்சுவர் எழுப்பி தலித்களைத் துண்டாக்கி, தாழ்த்தப்பட்டவர்களின் பாதச்சுவடு கூட படாத புனிதபூமியாக தங்களின் வாழ்விடங்களை மாற்றிக் கொண்டார்கள். அதன்பின் அரசும் புனிதத்திற்கான போராட்டத்திற்கு வலு சேர்க்க ஆரம்பித்தது. தண்ணீர் தொட்டி, ரேசன்கடை, பால்வாடி என அனைத்தையும் பிரித்தது. இறுதியில் பள்ளிக்கூடத்தையும் பிரித்தது. உத்தப்புரம் அரசுப்பள்ளி 1, அரசுப்பள்ளி 2 என்றானது.

“உத்தப்புரம் அரசு நடுநிலைப்பள்ளி 1”-ல் இந்த ஆண்டு 250 மாணவர்கள் படிக்கின்றனர். 1989க்குப் பின் இந்த ஆண்டு வரை ஒரு தலித் மாணவன் கூட இந்தப் பள்ளியில் சேர்க்கப்படவில்லை. சுமார் 19 ஆண்டுகளாக தலித் மாணவர்களோடு சேர்ந்து உட்காராத, பேசாத, பழகாத, நாமெல்லாம் பேசிப் பழக எந்தத் தகுதியுமற்ற இழி பிறவிகள் இந்த சுவற்றுக்கு அப்பால் இருக்கிறார்கள் என்ற அருவருக்கத்தக்க மனப்பதிவைத்தான் இந்தப் பள்ளிக்கூடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

பார்ப்பனரல்லாதவர்களுக்கு தனிப்பந்தி வைப்பதை ஏற்க முடியாது எனப்போராடி அதன் காரணமாக காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வந்த தந்தை பெரியாரின் வாரிசுகள் அதற்குப்பின் முக்கால் நூற்றாண்டு கழித்து தங்களது ஆட்சியில் அரசாங்கச் செலவில் பள்ளிக்கூடம் கட்டி, ஆசிரியருக்கு சம்பளம் கொடுத்து தலித் மாணவர்களுக்கு தனிப்பந்தியல்ல, தனிப்பள்ளிக்கூடத்தையே நடத்தி வருகின்றனர்.

இ. அன்றிலிருந்து இன்றுவரை உத்தப்புரம் தலித்கள் மீது பிள்ளைமார் சமூகத்தினர் நடத்திவரும் தாக்குதல்களும், உளரீதியான வன்முறைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. எவ்வளவோ உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு சில.

1) பஞ்சாயத்து தலைவர் பதவி கடந்த பத்தாண்டுகள் தலித்களுக்கு ஒதுக்கப்பட்டது. இம்முறை பொதுப் பிரிவானது. அப்படி மாறிய பின்பும் தலித்களை கும்பிட்டு ஓட்டுக் கேட்க வேண்டுமென்பதற்காக பிள்ளைமார் தரப்பில் யாரும் போட்டியிடவில்லை.

2) கடந்த காலத்தில் பிள்ளைமார்களின் ஆதரவோடு வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர் பஞ்சாயத்து நாற்காலியில் உட்கார்ந்து பேசியதில்லை.

3) கடந்த 15 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடும் தலித்கள் யாரும் இதுவரை பிள்ளைமார் தெருவில் நுழைந்து ஓட்டுக் கேட்க அனுமதிக்கப்பட்டதில்லை. ஊர் முக்கிலிருந்து கும்பிட்டு ஓட்டு கேட்டுவிட்டுப் போய்விட வேண்டும்.

4) இப்போது வார்டு உறுப்பினராக இருக்கிற பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த இருவர் பஞ்சாயத்துக் கூட்டங்களுக்கு வரும்போது டீயோ, காபியோ குடிப்பதில்லை.

5) இப்போது பஞ்சாயத்து கிளார்க்காக இருக்கிற தலித் வரி வாங்கக்கூட அவர்கள் பக்கம் போக முடியவில்லை. ஆனால் கிராம நிர்வாக அதிகாரியாக இருக்கிற பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர் கலெக்டரை விட அதிகாரத்துடன் இருப்பதாக எல்லோரும் சொல்கின்றனர்.

6) இவ்வளவு ஏன், இப்பொழுது மத்திய அரசின் தேசிய வேலைவாய்ப்பு ஊரக உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைத் திட்டத்தின் பயனாளிகள் கணக்கெடுக்கப்பட்டு புகைப்படங்கள் எடுக்கும் வேலைகள் முடிந்துள்ளது. அதில் ஒருவர் கூட பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல. அங்கு இருப்பவர்கள் கூலி வேலை செய்ய தேவையே இல்லாத அளவு பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் இல்லை. பாதிப்பேருக்கு மேல் கூலி வேலையை விட்டால் வேறு வழியில்லை. அப்படியிருந்தும் பெயரை யாரும் கொடுக்கவில்லை. காரணம் தலித் வெட்டிப்போடும் மண்ணை தான் சுமப்பதா? தான் வெட்டியெடுக்கும் மண்ணை தலித் தொடுவதா? அவனும் நானும் சேர்ந்து வேலை பார்ப்பதா? என்ற தீண்டாமையின் உச்ச வெளிப்பாடுதான் இந்த புள்ளி விபரம்.

இன்னும் வண்டி வண்டியாக சொல்லிக் கொண்டே போகலாம். இன்று இருக்கும் ஒவ்வொரு இளைஞனும் அனுபவித்த கொடுமையை கேட்கக்கூட அருகதையற்ற சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்ற குற்ற உணர்வு எழுத முடியாமல் செய்கிறது. இவ்வளவையும் எழுதுவதற்குக் காரணம் அரசு எந்திரம் நாளையே மனம் திருந்தி நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் அல்ல. இப்போது இதையெல்லாம் சொல்லாமல் எப்பொழுதுதான் கேட்க வேண்டிய காதுகளுக்கு இந்தத் துயரத்தின் வலி கேட்கும் என்ற நம்பிக்கைதான்.

4

“இதையெல்லாம் எழுதினாயே, நம் அரசியல் கட்சித் தலைவர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்காமல் இருக்க நியாயம் இல்லை. எனவே அவர்களின் செயல்களைப் பற்றி எழுதுகிறேன் சுருக்கமாகச் சொல்லப் போனால் ‘எப்பொழும் போல் நடந்து கொண்டார்கள்.’

விரிவாகச் சொல்வதாக இருந்தால், உத்தப்புரம் பிரச்சனையை சட்டமன்றத்தில் தோழர்.நன்மாறன் எழுப்பிய பொழுது படு வேகமாக பதில் சொன்ன சேடப்பட்டி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் துரைராஜ், அம்மாவின் கட்டளைக்கிணங்க அன்றே களமிறங்கினார். பிள்ளைமார்களின் பிரச்சனையை பிற்படுத்தப்பட்ட சாதிகளின் மொத்த பிரச்சனையாக மாற்றிய சூத்திரதாரியாக அவர் செயல்பட்டார். அவர் எதிர்பார்த்தது போல தலித்களுக்கு எதிரான கூட்டு வெகு சீக்கிரமே கைகூடியது.

பேரையூரில் பிள்ளைமார்களுக்கு ஆதரவாக அதிமுக ஒன்றியச் செயலாளர் தலைமையேற்று நடத்திய போராட்டத்தில் திமுக பொறுப்பாளர்கள் அணிவகுத்து நின்றனர். சாதிக்கு முன்னால் திமுகவாவது, அதிமுகவாவது எல்லாவற்றையும் கழற்றி எறி என்று நாலு திக்கும் எறிந்தனர். கோபாலபுரத்திலும், போயஸ் தோட்டத்திலும் கழன்ற துணிகள் போய் விழுந்தன. அவர்களுக்கும் இது ஒன்றும் புதிதல்ல.

அதிமுகவுக்கு அடுத்தபடியாக இந்துப் போர்வை போர்த்தி நடித்துக் கொண்டிருந்த பாரதீய ஜனதா தாழையூத்து மலையடிவாரத்தில் தலித்களுக்கு எதிரான கோரப்பற்களோடு இரத்த வெறிகொண்டு அலைந்து கொண்டிருக்கிறது. “சாதி இருக்கிறது என்பதை விட ராணுவம் வருகிறது என்பது அவமானமல்ல” என்று சட்டமன்றத்தில் திமுக தலைவர் கம்பீரமாக அறிவித்த இரண்டாம் நாள் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. சாதி இருக்கிறது என்ற மகத்தான உண்மை வானத்துக்கும் பூமிக்குமாக எழுந்து நின்றது. அதன் மெய்க்கீர்த்தியை வணங்கி, அதன் ரூப வடிவமான மலையடிவார விரும்பிகளை சமாதானப்படுத்தி அழைத்துவர தனது பிள்ளைமார் அணியை அனுப்பி வைத்தது திராவிட முன்னேற்றக்கழகம்.

மதுரை மேயரின் கணவர் கோபிநாதன் தலைமையில் பெரும்படை காடு நோக்கி புறப்பட்டது. “நம்ம சாதிக்காரங்களா...” என்று அலறியபடி அவர்கள் காட்டுக்குள் ஓடினர். சாதிப் பெருமைகளையும், கலைஞரின் பிள்ளைமார் கரிசனங்களைப் பற்றி மணிக்கணக்கில் எடுத்துக் கூறினர். அவர்களோ மசிவதாக இல்லை. ஆனாலும் அணி அணியாக அடலேறுகள் போய்க் கொண்டேயிருக்கின்றன.

இத்தனை ஆண்டுகாலம் எத்தனை வடிவங்களில் தீண்டாமை உண்டோ அத்தனை வடிவங்களிலும் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடுகிற உத்தப்புரத்தில் உண்மையில் தீண்டாமை இருக்கிறதா என்று ஆய்வு செய்ய உண்மையறியும் குழுவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கியிருக்கிறதாம். இந்த உண்மையை அறிய இன்னும் எத்தனை காலம் எடுக்கப் போகிறார்களோ தெரியவில்லை. நேற்றைய தினம் மதுரை மாவட்டம் மேலூரில் பொதுக் கூட்டத்தில் பேசவந்த தோழர் தா.பாண்டியன். உத்தப்புரத்திற்கு ஒரு எட்டு போய் வந்திருக்கலாம் உண்மையை கண்டறிய அல்லது அவரது சொந்த ஊரான வெள்ளமலைப்பட்டியில் குடியிருக்கும் ஒரு தலித்திடமோ அல்லது ஒரு பிரமலைக்கள்ளரிடமோ போன் போட்டு இரண்டு நிமிடம் பேசியிருக்கலாம். அவருக்குத் தேவையான உண்மை கிடைத்திருக்கும். சரி எப்படியோ அவர்கள் உண்மையை கண்டறிந்து வரட்டும். இடதுசாரி ஒற்றுமைக்காக நாம் காத்திருப்போம்.

இப்படியாக சோகக் காட்சியும் காமெடிக் காட்சியும் மாறி மாறி வந்துபோக கடைசியில் தலித் கட்சிகளின் தலைவர்கள் கிளைமாக்ஸ் காட்சிக்காக வந்து நின்றார்கள். தோழர் நன்மாறன் உத்தப்புரம் பிரச்சனையை சட்டமன்றத்தில் கிளப்பிய பொழுது விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை “அரசியல் லாபத்திற்காக ஒரு கட்சி இந்தப் பிரச்சனையை எடுக்கிறது” என்றார். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா கூறியிருப்பதுபோல, “பொருளாதார லாபத்திற்காக என்றால் அவர் ஆதரித்திருப்பாரோ என்னவோ”.

அடுத்த ஒரு வாரத்தில் பிரச்சனை பெரிதாகி பிரகாஷ்காரத் வருவது வரை நீண்டு சென்றவுடன் மே 6ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் உத்தப்புரம் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காரத் வருவதற்கு முதல்நாள் சுவர் இடிக்கப்பட்டவுடன் மே 7ம் தேதி மாலை மற்றும் 8,9 ஆகிய மூன்று தேதிகளிலும் பேரையூர், எழுமலை இரு நகரங்களிலும் கதவடைப்பு, மறியல், காவல்நிலைய முற்றுகை என தினமும் நடந்து வந்தது. மறு நாள் 10ம் தேதி பேரையூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவுக்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் “சமூக ஒற்றுமைக்கும் அமைதிக்கும் முன்னுதாரணமாகத் திகழும் இப்பகுதிக்கு வருவதில் பெருமைப்படுகிறேன்” (மறு நாள் மே 11 பேரையூரில் முழு அடைப்பைத்தான் முன்கூட்டியே பேசினாரோ என்னவோ?) என்று தன்னுடைய பேச்சை ஆரம்பித்து, நானோ எனது கட்சியோ ஒரு போதும் சாதிக் கலவரத்தை தூண்டியதில்லை எனச்சொல்லி சுமார் ஒரு மணிநேரம் விளக்கவுரையாற்றினார். ஆனால் உத்தப்புரம் பிரச்சனையை பற்றி அவர் வாயே திறக்கவில்லை. அதுவெல்லாம் சாதிக்கலவரத்தை தூண்டுபவர்களின் செயல் என்று ஆதிக்க சாதிகள் சொல்லும் அதே வார்த்தையை அவரும் சொல்லிவிட்டுச் சென்றார்.

கூட்டத்திற்கு ஒருவரை அனுப்பி செல்போனை ஆன் செய்ய வைத்து உத்தப்புரத்திலிருந்து அவரது முழுப்பேச்சையும் கேட்டுக் கொண்டேயிருந்த இளைஞர்கள் அவர் பேசிமுடித்ததும் சொன்ன வார்த்தையை எழுத முடியாவிட்டாலும் அவரால் எளிதில் யூகிக்க முடியும்..

“தென் தமிழகத்தில் சாதீய மோதல்களை உருவாக்கவும் அதில் தாழ்த்தப்பட்ட மக்களை பலிகடா ஆக்கவும் தொடர்ந்து சாதிய சகதிக்குள் சிக்க வைக்கவும் அதன் மூலம் நிரந்தரமாக அவர்களை தனிமைப்படுத்தவும், சில சுயநல அரசியல் சக்திகள் செய்யும் சதியாகும்” என்று உத்தப்புரம் பிரச்சனையைப் பற்றி கோபத்தோடு அறிக்கை விட்டார் டாக்டர் கிருஷ்ணசாமி. பத்தாண்டுகளுக்கு மேலாக அவரது இயக்கத்தின் மதுரை மாவட்டத் தளமாக விளங்கிய உத்தப்புரத்தில் அவரது கட்சிக் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு விட்டதால் கோபப்பட்டு இப்படி அறிக்கை விட்டுள்ளார் என்று நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அந்தக் கொடியை பிடுங்கியது உத்தப்புரம் தலித்துகள் அல்ல, அவர்தான் என்பதை அவரால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை என்று நமக்குத் தெரியவில்லை.

இறுதியாக உத்தப்புரம் தலித்கள் 89ம் ஆண்டு உரிமைக்காக குரல் கொடுத்தபோது பிள்ளைமார்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு களத்திலே இறங்கியது கோடாங்கி நாயக்கன்பட்டி, பாறைப்பட்டி, எருமார்பட்டி, மானூத்து, ராஜக்காபட்டி ஆகிய கிராமங்கள். இப்போதும் அதே ஐந்து கிராமங்கள் களத்திலே இறங்கியுள்ளன. ஒவ்வொரு நாளும் மறியலும் போராட்டமும் நடத்துகின்றன. இந்த கிராமங்களில் தேவர்கள், பிள்ளைமார்கள், நாயக்கர்கள், கவுண்டர்கள் இருக்கிறார்கள். அதிமுகவினரோ, திமுகவினரோ, காங்கிரஸ்காரரோ யாருமில்லை.

ஆனால் இந்த ஐந்து கிராமங்களிலும் தலித்களுக்கு ஆதரவாக, தீண்டாமைச்சுவர் இடிக்கப்பட்டதன் நியாயத்தை விளக்கி, வருகிற தாக்குதல்களை சந்தித்து கம்பீரமாக பறந்து கொண்டிருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி. சிகப்புத்துண்டை தோளில் போட்டபடி ஐந்து ஊர் சாவடியிலும் ஒருவன் உட்கார்ந்து மொத்த ஊருக்கும் எதிராக பொழுதெல்லாம் பேசி, தவித்து, தொண்டை அடைத்தபடி இருக்கிறான். அவனுக்குப்பின்னால், “அம்பேத்கர் பிறந்த தின விழா” என்ற பேனர் எதுவும் கட்டப்படவில்லை. அது அவனுக்குப் பொருட்டுமல்ல. இது 89 அல்ல என்று உலகுக்குச் சொல்லும் ஒரே சாட்சி அவன்தான். அந்த சாட்சி போதும், உத்தப்புரத்து தலித்துகளின் ஆதார நம்பிக்கை விண்முட்ட எழ. தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக வர்க்க உரமேறிய போராட்டத்தை முன்னிலும் வேகமாக நடத்த.

5

கட்டுரையை முடிக்கும் முன் இரண்டு விஷயங்களை சொல்லியே ஆகவேண்டும் என்று தோன்றுகிறது.

1. 1964 கலவரத்தில் பெரும் சேதமும் உயிர்ப்பலியும் தலித்துகளுக்கு ஏற்பட்டது. ஆனால் அவர்கள் தளர்ந்து விடவில்லை. மீண்டு எழுந்தார்கள். மீண்டும் 1989ல் பெரும் சேதமும் நான்கு உயிர்ப்பலிகளும் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் மனம் தளரவில்லை. தொடர்ந்து முயற்சித்தார்கள். இப்போது 2008ல் புதிய பரிணாமத்தோடு களத்திலே இறங்கி நெஞ்சுரத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். சாதீய அவமானத்தை துடைத்தெறிய கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இழப்புகளை சந்தித்த வண்ணம் போராடிக் கொண்டேயிருக்கும் உத்தப்புரத்து மக்களின் ஆணிவேர் எதுவென்று கேட்டால் அடுத்தவனை அண்டிப்பிழைக்க அவசியமில்லாத அவர்களது வாழ்நிலை. அங்கே இருக்கும் தலித்கள் பெரும்பான்மையோருக்கு சொந்தநிலம் இருக்கிறது. அவற்றை மையப்படுத்தி வாழ வழி இருக்கிறது. அதன்மேல் நின்று சுயமரியாதைக்கான போராட்டத்தை அவர்கள் விடாமல் நடத்தி வருகின்றனர்.

அதே உத்தப்புரம் பஞ்சாயத்தின் துணை கிராமமான பொட்டல்பட்டியில் உள்ள தலித்துகள் இன்றுவரை வாய்திறக்க முடியவில்லை. கைக்கு எட்டும் தூரத்தில் தனது சகோதரர்கள் நடத்திக் கொண்டிருக்கும் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக முணுமுணுக்கக்கூட முடியவில்லை. ஏனென்றால் மறுநாள் காலை ஆதிக்கசக்திகளின் நிலத்தில்தான் அவர்கள் வேலைக்குப் போயாக வேண்டும். வயிறும் வாழ்வும் குடும்பமும் அவர்களை நம்பித்தான். நிலம் வாழ்வுக்கும் வயிற்றுக்கும் அடிப்படை. சுயமரியாதைக்கும் தன்மானத்துக்கும் அடிப்படை. தலித் விடுதலைக்கான மூல முழக்கம் நிலம்... நிலம்... நிலம்...

2. மே 6ம் தேதி காலை 7.45 மணியளவில் தீண்டாமைச்சுவர் இடிக்கப்பட்டு தலித் பகுதியில் பாதை உருவாக்க முயற்சி செய்யப்பட்டபோது நடுவில் பெரும் கிணறு ஒன்று இருந்தது. இந்தக் கிணற்றை மூடினால் தான் பாதைபோட முடியும். அது தனியார் பட்டா நிலத்தில் உள்ள கிணறு. எனவே என்ன செய்வது என்று அதிகாரிகள் யோசித்துக் கொண்டிருந்தபோது, தோழர்கள் கே.பொன்னையா, கே.முத்து இருளன் இருவரும் அந்த இடத்தில், இந்த கணத்திலே “பொதுப்பாதைக்காக எங்கள் கிணற்றை அரசுக்கு ஒப்படைக்கிறோம்” என்று மாவட்ட கோட்டாட்சியருக்கு எழுதிக் கொடுத்தனர். அதன்பின் தான் கிணற்றை நிரப்பி பாதை போடப்பட்டது.

ஆனால் பாதை அமைக்கப்பட்டவுடன் அவமானம் தாளாமல் பிள்ளைமார்கள் ஊரையேக் காலி செய்து மலையடிவாரத்திற்கு ஓடிவிட்டனர். தங்களின் உரிமைக்காக எதையும் இழக்கத் துணிகிற தலித்துகள் ஒருபக்கம். எதை இழந்தாலும் சாதியை இழக்க மாட்டோம் என்று கொக்கரிக்கிற சாதீயர்கள் ஒருபக்கம். இரண்டுக்கும் இடையில் இருக்கிறது ‘உத்தப்புரம்’, ‘தமிழகம்’, ‘இந்தியா’



__சு.வெங்கடேசன்

e mail (suvetpk@rediffmail.com)

thanks...

pls click

www.keetru.com




Monday, May 12, 2008

''பாரதிகிருஷ்ண குமார்'' அவர்களின் முதல் சிறுகதை,இது



( ஜனவரி 2008''உயிர் எழுத்து'' என்ற மாத இதழில் வெளிவந்த ''பாரதிகிருஷ்ண குமார்'' அவர்களின் முதல் சிறுகதை,இது... )


அம்மாவும், அந்தோன் சேக்கவும்




அம்மா ஒருமுறைகூட,தன் தேவைகளுக்காகப் பிறர் உதவியை நாடியது கிடையாது.அந்த ராத்திரியில்,குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டு எழுப்பியது ஆச்சரியமாக இருந்து.

"ரொம்பத் தொண்டையெல்லாங் காஞ்சு போச்சு..எந்திரிக்க முடியாம தாகம் அமுக்குது..தம்பீ..தண்ணீ கொண்டாடா... " என்றாள்.

அவள் குரலில் மரணத்தின் நெடி ஏறி விட்டிருந்ததுது.எனக்குப் புலப்படவில்லை.இரவு ஒன்றரை மணியில் இருந்து,காலை ஐந்து மணிக்குள் நாலைந்து சொம்பு குடித்தும் தாகம் தீரவில்லை. உதடுகள் வறண்டு,பிளந்து கிடந்ததுது;துயரம் தருவதாக இருந்தது.நாக்கினால் இரண்டு உதடுகளையும் புரட்டிக்கொண்டே இருந்தாள்.ஐந்தரை மணிக்குக் கொஞ்சம் பால் கொடுத்தேன்.உறங்கப் போகுமுன்,எல்லா சமுத்திரங்களும் வற்றி தூர்ந்து விட்டதாகவும், அனைத்துக் கப்பல்களும் அதனதன் இடத்தில் தரை தட்டி நிற்பதாகவும் சொன்னாள்.தரை தட்டிய கப்பல்களில் இருந்து இறங்கிய மனிதர்கள், தவிப்புடன் கப்பலைச் சுற்றி நின்று கொண்டிருக்கிறார்கள் என்றாள்.ஏதாச்சும் கனவா?என்று கேட்டதும்,புன்னகைத்தாள்.



வீட்டில் முதல் ஆளாய் எழுந்திருக்கும் அம்மா ஏழு மணிக்குப் பிறகும் உறங்குவதால் அப்பா அதிர்ந்து போயிருந்தார்.இரவில் அம்மா தண்ணீர் கேட்டதை,தாகம் அடங்காமல் தவித்ததைக் குழப்பத்துடன் கேட்டுக் கொண்டார்."என் சத்தம் கேட்டும் அவ எந்திரிக்காம இருக்கிறதுதான் ஆச்சரியம்" என்று நான்கைந்து முறை சொன்னபடி,கொல்லையில் பல் விளக்கிக் கொண்டிருந்தார்.தலையணையில் இருந்து தலை இறங்கி, அம்மா வினோதமாகப் படுத்திருப்பதாக வேலம்மா வந்து சொன்னதும் எல்லாம் துயரம் மிக்கதாக மாறிவிட்டது.டாக்டர் உறுதி செய்ததும்,வேலைகள் துவங்கி விட்டன.

உடனே, குளிப்பாட்டி,சுத்தம் செய்து வைப்பதற்காக, அழுதபடி பெண்கள் கூட்டம் கொல்லைப் புறத்தில் சேர்ந்திருந்து.எல்லோருக்கும் ஆள் அனுப்புகிற வேலைக்கு ஆள் தேடிக் கொண்டிருந்தார்கள்.இரண்டாவது தெருவில் இருந்த சித்தி, அம்மாவின் முகத்தோடு முகம் வைத்து அழுது கொண்டிருந்தாள்."எப்பிடியும் சாயங்காலம் அஞ்சு அஞ்சரைக்கு எடுத்துரணும். அக்கம் பக்கத்துல,குழந்தைங்க நிறைய இருக்கு.இப்ப கோவில் பூட்டுனாலும்,ராத்திரி சாமிக்கு வெக்கணும்.குழந்தைங்களையும் , சாமியையும் பட்டினி போட்டுறக் கூடாது" என்றார்,மாமா.

வாசலுக்கு இடதுபுறம்,தெருவைப் பார்த்துப் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த அப்பா,இறுதிவரை அந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவில்லை.ஒரு முறை எழ முயன்று,மயக்கமாகி நாற்காலியிலேயே விழுந்தார்.அழுது கொண்டே இருந்தார்.யாரோடும் பேசவேயில்லை.என்ன ஆச்சு?எப்படி ஆச்சு?என்று கேட்டவரிடம் கூட , அழுகையே பதிலாக தந்து கொண்டிருந்தார்.விசாரிக்க வந்த சிலரின் முகத்தில் அது மிகுந்த ஏமாற்றத்தைத் தந்து கொண்டிருந்து.

அக்கா மட்டும் சென்னையில் இருந்து வரவேண்டும்.அவளும், அத்தானும் பஸ் ஏறிவிட்டதாகவும்,சாயங்காலம் அஞ்சு மணிக்குள் வந்து விடுவார்கள் என்றும் யாரோ சொல்லிக்கொண்டிருந்தார்கள்.யாராவது, எதையாவது சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.எல்லாவற்றிற்கும் தலையாட்டுவது தவிர எதுவும் செய்யத் தோன்றவில்லை.எங்கும் துயரத்தின் சாயல்கள் பெருகிக்கொண்டே இருந்தன.நான் மட்டுமே அறிந்திருந்த என் ஒற்றை நிழல்,பல்கி பெருகி ...எங்கும் நிழல்களின் நெரிசலில் நான் தொலைந்து கிடந்தேன்.

"தலை முடி இறக்கணும் தம்பி" என்று சொல்லி விட்டு, சித்தப்பா கூர்ந்து பார்த்தார். சம்மதம் என்று தலையசைத்தேன்."எங்க முடியாது சொல்லியிருவியோன்னு பயந்தேன்...நம்ம புள்ளைங்க பாசமானதுங்க.. "என்று சொல்லிக் கொண்டே போனார்.

எல்லோரது இயக்கத்திலும்,ஒரு கடிகாரம் இணைந்து ஓடுவது புலப்பட்டது.சில நூறு கடிகாரங்களின் ஓசை மட்டும் உருவாகி,ஓசை பெரிதாகி,எல்லாக் கடிகாரங்களும் ஒரு சேரப் பன்னிரண்டு மணியை ஒலிக்கிற பேரோசை உள்ளுக்குள் அறைந்தது."வாய் விட்டு அழுதுரணும்" என்று என்னை வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள்.

அழுவதற்கான என் முயற்சிகள்தோற்றுப் போன துயரமும் என்னோடு சேர்ந்து கொண்டது. நம் துயரம் மற்றவர்களுக்குத் தெரியாது என்பதல்ல அந்தக் கவலை.சேர்ந்து அழுது கண்ணீர் பெருக்கி, ஆறுதல் கொள்வது இயலாது போனது.சிரமத்தையும்,கடுமையான மன அழுத்ததையும் தந்தது.எதுவானாலும் ,சாயங்காலம் அஞ்சு,அஞ்சரை மணிவரை தான்.

ஏதோ வேலையாக, வீட்டுக்குள் போவது மாதிரி, அம்மாவைப் பார்க்கப் போனேன்.அறையின் மய்யத்தில் அம்மா.என்ன வேலை சொன்னாலும்,உடனே அதைச் செய்ய தயாராக இருப்பதாக,இருந்து முகம். வாயின் வலது புறமிருந்து லேசாக பால் கசிந்து கொண்டிருந்து.இடது நாசியின் முகப்பில் வேர்வை துளிகள் மாதிரி
ரத்தம்
பூத்திருந்து..என்னைப் பார்த்த அத்தை என்னைக் காட்டி அம்மாவிடம் ஏதோ நியாயம் கேட்டது.அத்தையின் அழுகைக்குள் அமிழ்ந்து மூழ்கியது அவளது நியாயம்.என்ன வேலை சொன்னாலும்...அதிலும் அப்பா என்ன சொன்னாலும், உடனே ஒப்புக் கொண்டு சம்மதிக்கிற அதே முகத்துடன் அம்மா.

ஒரு முறைகூட மறுத்துப் பேசியதில்லை அம்மா.அக்காவுக்கும், எனக்கும் அது தீராத ஆச்சர்யம்.அம்மா மாதிரி சொன்னதை மட்டும் செய்கிற ஒரு பெண் கிடைத்தால்,அப்பா மாதிரி நிறைய சம்பாதிக்க முடியும் என்று உறவில் எல்லோரும்சொன்னார்கள்.அக்காவின் திருமணத்திற்குப் பிறகு,எனக்கும் அப்பாவுக்கும் இடையில் அதிகரித்த இடைவெளி வீட்டின் நிம்மதியைச் சீர்குலைத்தது.


"அவரு என்ன சொன்னாலும் சரின்னு கேட்டுக்க"என்றுதான் அம்மா எப்போதும் சொல்வது."எப்படித்தான் காலமெல்லாம் அவரு சொன்னதுக்குத் தலையாட்டிக்கிட்டே இருக்க?" என்று ஒரு தடவ அம்மாவிடம் கேட்ட நாள்,மறக்க முடியாத நாளாகி விட்டது.

"உங்க அக்காவுக்கு மூணு வயசு... அதுவரைக்கும் அவரு சொல்லி,நா எதுக்கும் மறுப்புச் சொன்னதில்லை...உங்க அத்தைக்கு அவர் பார்த்த பையன வேண்டாமுன்னு சொன்னேன்.மறுத்துப் பேசுனது அதுதான் முத தடவ...அந்த மாப்பிள்ளைப் பையன எனக்கும் தெரியும்.அவன் என்னயவே ஒரு மாதிரி பாக்குற பையன்...அதனாலதான் அதக்கூட சொன்னேன்.உங்க அப்பா ரொம்பக் கோபமாகி,ரெண்டு கையையும் எம் முகத்துக்கு நேரா நீட்டிக்கிட்டு, "பொண்டாட்டின்னா சொன்ன பேச்சு கேக்கணும்;சொன்ன வேலையச் செய்யணும்; எதுத்து ஒரு வார்த்த பேசின..உன்னையும் கொன்னுட்டு, உம் புள்ளையையும் கொன்னுட்டு, நானும் செத்துருவேன்.முட்டை போடுற கோழிக்குத்தான் பொச்செரிச்சல் தெரியும்...பேருக்குத்தான் சேவல்..அந்த மரியாதையக் காப்பாத்து " என்று சொல்லிட்டு அழ ஆரம்பிச்சுட்டாரு..அதாம் முதலுங் கடைசியும்.இனி என்னிக்கும் எதுத்துப் பேசீர மாட்டேன்.குழந்தையிலே இருந்தே அவருக்கு கொஞ்சம் மன பாதிப்பு இருந்துருக்குன்னு அப்புறதான் தெரிஞ்சுது.மத்தவங்களுக்குத் தான் இது வீடு...எனக்கு ஆஸ்பத்திரியுங் கூட.."


அக்கா வந்து சேர இன்னும் தாமதம் ஆகும் என்றார்கள்.மயானக் கரையில் காத்திருப்பது என்று முடிவானது.ஆறரை மணிக்கெல்லாம் மூலக்கரை மயானம் வந்தாகி விட்டது.அப்பாவும், அவரது வெகு சில நண்பர்களும்,உறவினர்களும்,எனது
நண்பர்களும் தனித்தனியே அவரவர் வசதிக்கு நின்றும், உட்கார்ந்தும் பேசிக் கொண்டிருந்தார்கள்.நான் மட்டும் தனியாக அம்மாவுக்குப் பக்கத்தில் உடகார்ந்திருந்தேன்.யாரோ தொட்டுக் கூப்பிட்டார்கள்,''வாங்க அந்தப்பக்கம் உக்காருவோம்'' என்று எழுந்து போனேன்.

நிறுத்தப்பட்டிருந்த ஒரு வேனுக்கு அந்தப்புறம் நண்பர்கள் அமர்ந்திருந்தார்கள்.பற்ற வைத்த ஒரு சிகரெட்டை செல்வா என்னிடம் நீட்டினார்.புகை இதமாக இருந்து.நிறைய சிகரெட்டுகள் புகைந்து கொண்டிருந்தன.''அக்கா வர இன்னும் ஒன் அவர் ஆகும்...சமீத்துல படிச்ச கதை ஏதாவது இருந்தா சொல்லுங்க''என்றார்,செல்வா,ஆமோதிப்பது போல,எல்லோரும் மவுனமாக இருந்தார்கள்,இளங்கோ , என்னைத் தொட்டு, கதை சொல்லுமாறு ஜாடை செய்தார்.இரண்டு முறை ஆழ்ந்து புகைத்துக்கொண்டேன்..துக்கம் அடைத்திருந்த தொண்டைக் குழிக்குள் புகை சுழன்று இறங்கியது.மெல்லிய குரலில் அந்தோன் சேக்கவ் எழுதிய 'ஆறாவது வார்டு' கதையைச் சொல்லத் துவங்கினேன்.

''மேல் நோக்கி நீண்டிருக்கும் ஆணிகள் அடர்ந்த, சாயம் போன அந்த வேலியடைப்பு,நமது மருத்துவமனைகளுக்கும்,சிறைச்சாலைகளுக்கும் உரித்தான கேடு கெட்ட சோகத்தோற்றத்துடன் ''கதை துவங்கியது'' உலகிலுள்ள வன்முறை அனைத்தும் தனது முதுகுக்குப் பின்னால் ஒன்று சேர்ந்து தம்மை விரட்டுவதாக அஞ்சி....'' வீதியில் ஓடிய இவான் தீமித்ரிச்சும்,''வலி என்பது வலியைப் பற்றிய ஒர் உயிர்த்துடிப்புள்ள எண்ணமே ஆகும்.மன வலிமையின் துணை கொண்டு அந்த எண்ணத்தை விட்டொழித்தால்,வலி மறைந்து போகும்'' என்று அறிந்து உணர்ந்த டாகடர் ஆந்திரேய் எபிமிச்சும்...
மூலகரை மயானத்தில் திரிந்தார்கள்.

கதை முடிந்ததும்,எல்லோரும் மவுனமாக கலைந்து போனார்கள்.நான் மீண்டும் அம்மாவிடம் வந்தேன்.


இறந்து கிடந்தது அம்மாவே அல்ல; அச்சு முறிந்து கிடந்த அப்பாவின் அதிகாரம்.


""-பாரதிகிருஷ்ண குமார்""



Thursday, February 21, 2008

www.thamuyesa.org

pls visit

thamuyesa.org




தமுஎச-இந்த நான்கு எழுத்துக்கள் தமிழகமெங்கும் சிறு நகரங்கள் வரை பரவலாக மக்களுக்கு அறிமுகமான ஒரு அமைப்பை-ஓர் இயக்கத்தைக் குறிக்கும் எழுத்துக்களாகும். ஆம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இன்று ஒரு மகத்தான மக்கள் கலை இலக்கிய இயக்கமாகப் பரவி வளர்ந்து கொண்டிருக்கிறது.
1975 ஆம் ஆண்டு ஜூலை 12, 13 ஆகிய தேதிகளில் மதுரையில் தமுஎச வின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. 2005 செப்டம்பர் 30, அக்டோபர் 1,2 ஆகிய தேதிகளில் எங்கள் பத்தாவது மாநில மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற்றது.
இடைப்பட்ட இந்த முப்பது ஆண்டுகளில் தமிழகக் கலை இலக்கிய உலகில் ஒரு புறக்கணிக்க முடியாத சக்தியாக எல்லா மாவட்டங்களிலும் கிளை விரித்துச் செயல்படுகிற ஒரே கலை இலக்கிய இயக்கமாக தமுஎச எழுந்து நிற்கிறது. நச்சுக்கலை இலக்கிய எதிர்ப்பையும் நல்ல கலை இலக்கிய வளர்ப்பையும் தன் சாரமாகக் கொண்டு எழுத்தாளர்கள், கலைஞர்கள், கலைக்குழுக்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் எனப் பல மனங்களை ஒருங்கிணைக்கும் சக்தியாகவும் கலை இலக்கிய உரிமை காத்திடக் களம் இறங்கும் அமைப்பாகவும் தமுஎச நிமிர்ந்து நிற்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இயங்கும் நாடகக் குழுக்களின் மூலமாக வீதி நாடக மற்றும் மேடை நாடக வடிவில் முற்போக்கான சிந்தனைகளை, உணர்வுகளை மக்களிடம் எடுத்துச் செல்கிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த சிறுகதை, கவிதை, குழந்தை இலக்கியம், மொழிபெயர்ப்பு, தமிழ் வளர்ச்சி, நாவல், நூல்களுக்கும் திரைப்படங்களுக்கும் தமுஎச விருது வழங்குகிறது. இளம் படைப்பாளிகளின் திறன்களை வளர்த்திட பட்டறைகள், பயிற்சி முகாம்கள் நடத்துகிறது. கலை இரவு என்னும் புதிய வடிவம் தமுஎச தமிழ்கூறு நல்லுலகுக்கு அளித்த கொடை என்று தயக்கமின்றிக் கூறலாம்.
கிளைகளில் மாவட்டங்களில் மாதந்தோறும் நூல் அறிமுக நூல் விமர்சனக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. புதிய நூல்கள், ஒலி நாடாக்கள், இசைப் பேழைகள், குறுந்தகடுகள் வெளியிடப்படுகின்றன. இப்போது ஆவணப்பட, குறும்படத் தயாரிப்பிலும் தமுஎச படைப்பாளிகள் ஈடுபட்டுள்ளனர்.
தமுஎச வில் இணைகின்ற படைப்பாளிகள், வாசகர்கள், ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் தமுஎச வோடு இயங்குவதை ஓர் அர்த்தமுள்ள வாழ்வனுபவமாக உணர்கிறார்கள். சொந்த வாழ்வின் சோகங்களையும் சோர்வுகளையும் அவ நம்பிக்கைகளையும் கழற்றி எறிந்து நித்தம் நவமெனச் சுடர் விடும் படைப்பு மனநிலையில் திளைக்கிறார்கள். சமூக அக்கறையுள்ள மனிதர்களாக வாழத்துவங்குகிறார்கள்.
இவ்வரிகளை வாசிக்கிற நீங்களும் எங்கள் பெரும் கலைப்படையில் இணைந்திட வேண்டுமென அன்புடன் இருகரம் நீட்டி அழைக்கிறோம். சிதைந்து வரும் நம் பண்பாட்டுச் சூழலை முற்போக்கான கலை இலக்கிய வடிவங்களோடு எதிர் கொண்டு மக்களுக்கான புதிய பண்பாட்டை உருவாக்குவோம்.

மாநிலக்குழு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
57/11, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை - 625 001
மாநிலச் செயலர் செல்பேசி : 94436 95553